Flipkart Big Billion Days, Amazon Great Indian Festival விற்பனை நேற்று (செப்.23) தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு நிறுவனங்களும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மெகா ஷாப்பிங் விற்பனை செய்யப்பட உள்ளன. ஐபோன், முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள், மின்னனு சாதங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல பொருட்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உங்கள் 4ஜி போனை மாற்றி 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், பிளிப்கார்ட், அமேசான் ஆஃபர் விற்பனையில் குறைந்த விலையில் வாங்கி கொள்ளலாம். சிறந்த வசதிகளுடன் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் பிளிப்கார்ட், அமேசான் ஆஃபரில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Poco X4 Pro
Poco X4 Pro பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 6.67 இன்ச் 120HZ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 11 இன் அடிப்படையில் MIUI 13இல் இயங்குகிறது. 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. Poco X4 Pro பிளிப்கார்ட்டில் 15,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக இந்த விலை உள்ளது. ரேம்,
ஸ்டோரேஜ் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் விலை மாறுபடும்.
Redmi Note 11T
Redmi Note 11T அமேசான் தளத்தில் கிடைக்கிறது. Redmi Note 11T 5ஜி போன் MediaTek Dimensity 810 மூலம் இயக்கப்படுகிறது. 6.6 இன்ச் 90hz IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் MIUI 12.5, software மூலம் இயங்குகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. ரூ.1,000 கூப்பன் மூலம் அமேசானில் ரூ.13,999 முதல் இந்த போனின் விலை தொடங்குகிறது.
iQOO Z6 5G
iQOO Z6 5G போன் 6.58-இன்ச் 120HZ எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான FuntouchOS 12 இல் இயங்கும் இந்த ஃபோன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. iQOO Z6 5G அமேசானில் கிடைக்கிறது. ரூ. 14,999 முதல் இதன் விலை தொடங்குகிறது.
Realme 9i 5G
Realme 9i 5G போன் சிறந்த லுக் கொடுக்கிறது. போன் லுக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால் Realme 9i 5G ஒரு நல்ல தேர்வாகும். MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் செயல்படுகிறது. இது 6.6-இன்ச் 90Hz LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 software-இல் இயங்குகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங். 5000mAh பேட்டரி வசதி உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. Realme 9i 5G பிளிப்கார்ட்டில் ரூ.14,999 முதல் கிடைக்கிறது.
Motorola G71
மோட்டோரோலா ஜி 71 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு அம்சங்கள் கொண்ட சிறந்த 5ஜி போனாகும். ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. மோட்டோரோலா ஜி71 பிளிப்கார்ட்டில் ரூ.15,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil