வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் பிக் பில்லியன் டேஸ் விற்பனையைத் தொடங்க உள்ளது. ஸ்மாட்போன்கள், ஐபோன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் கேஜெட்ஸ் வரை அனைத்திற்கும் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. குறைந்த விலையில் பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் இந்த ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் ஐபோன் 12 தற்போது வரை பலராலும் விரும்பபடுகிறது. அந்தவகையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன் 12 போனுக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மொத்த விலையில் இருந்து ரூ.20,000க்கும் மேல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 ரூ.59,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 12 ரூ.38,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இதிலும் குறைவான விலையைப் பெறலாம். பேங்க் ஆஃபர் ரூ.3,000 மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ.3,000 உடன் இணைந்தால் ஐபோன் 12 வெறும் ரூ.32,999 விலையில் பெறலாம்.
64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்பது 2023 காலத்தில் சற்று குறைவாக இருந்தாலும் மற்ற அனைத்து வசதிகளையும் இந்த ஐபோன் வழங்குகிறது. 5ஜி இணைப்பு, IP68, வயர்லெஸ் சார்ஜிங், டூயல் கேமரா, டால்பி விஷன் வடிவத்தில் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சமீபத்திய iOS 17 வெர்ஷனில் இயங்குகிறது.
இந்த விலையில், ஐபோன் 12 ஆப்பிளின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மாறுகிறது. இருப்பினும், அதிக மின்காந்த கதிர்வீச்சுகாரணமாக பிரான்ஸ் நாட்டில் ஐபோன் 12 விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“