ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் 2020: என்ன வாங்கலாம், எவ்வளவு தள்ளுபடி?

ஆடை மற்றும் அழகு சாதனங்களில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் புதிய ஒப்பந்தங்களுடன் சிறந்த பிராண்டுகளிலிருந்து தள்ளுபடிகளைப் பெறலாம்.

Flipkart big billion day tamil news
Flipkart big billion day tamil news

Flipkart Big Billion Day Tamil News: அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21 வரை நடைபெறவிருக்கும் பிக் பில்லியன் விற்பனைக்கான தேதியை ஃப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. விற்பனையின் போது பொருட்கள் மற்றும் சாதனங்களின் எண்ணிக்கையில் அதிகப்படியான சேமிப்பு மற்றும் விலைக் குறைப்பை ஃப்ளிப்கார்ட் வழங்கும் என அறிவித்திருக்கிறது.

ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு, அக்டோபர் 15-ம் தேதி இரவு 8 மணி முதல் விற்பனை தொடங்கும். மற்றவர்களுக்கு நள்ளிரவு தொடங்கும். அமேசான் நிறுவனமும் தன்னுடைய கிரேட் இந்தியன் விழா விற்பனையையும் அதே நேரத்தில் தொடங்கவிருக்கிறது.

ஃப்ளிப்கார்ட் வலைத்தளத்தின் நேரடி பக்கத்தில் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்குவதாக உறுதியளித்திருக்கிறது. அதே நேரத்தில், Paytm வாலட் மற்றும் Paytm வங்கிக் கணக்கு மூலம் வாங்குபவர்களுக்கு கேஷ்பேக் வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறது. இது தவிர, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு no cost EMI திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.

பிக் பில்லியன் நாள் விற்பனை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அதன் பாகங்களுக்கு 80 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கவுள்ளது. பெஸ்ட் செல்லிங் லேப்டாப்களுக்கு அதிகபட்சம் 60 சதவிகிதம் வரை விலைக் குறைப்பு. கூடுதலாக, பெரிய உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிகள், 75 சதவிகித தள்ளுபடி விலையில் எக்சேஞ் சலுகைகள் மற்றும் no cost EMI வசதிகளோடும் வாங்கலாம்.

ஆடை மற்றும் ஆபரணங்களில், ஆண்கள் உடை, மேற்கத்திய உடைகள், விளையாட்டு காலணிகள் மற்றும் பெண்களின் எத்னிக் உடைகள் ஆகியவற்றில் 60 – 80 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் விற்பனையின் முதல் நாளில் கூடுதலாக 10 சதவிகித விலைக் குறைப்பை வழங்குவதாகக் கூறுகிறது.

இந்த மெகா விற்பனையின் சிறப்பம்சமாக ஃப்ளிப்கார்ட்டின் சொந்த தயாரிப்புகளுக்கு ஏராளமான தள்ளுபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், வீட்டு உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர்கள் மீது ஒவ்வொரு நாளும் புதிய ஒப்பந்தங்களுடன் 60 சதவிகித தள்ளுபடி இருக்கும். மற்ற தயாரிப்புகளை 50-80 சதவிகித தள்ளுபடியில் பெறலாம்.

ஆடை மற்றும் அழகு சாதனங்களில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் புதிய ஒப்பந்தங்களுடன், வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் இயங்குதளத்தில் நள்ளிரவு 12, காலை 8 மற்றும் மாலை 4 மணிக்குச் சிறந்த பிராண்டுகளிலிருந்து தள்ளுபடிகளைப் பெறலாம். மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் குறித்த ஒப்பந்தங்களும் வழங்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Flipkart big billion sale tamil news latest

Next Story
உங்களுக்கு ஆர்வமான தகவல்களை அள்ளிக் கொட்டும்: ஃபேஸ்புக் லேட்டஸ்ட் அப்டேட்Facebook new feature tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com