scorecardresearch

பிளிப்கார்ட்டில் தொடங்கியாச்சு ஆஃபரு: ரூ.12,000 முதல் 5ஜி போன்கள்.. இப்பவே செக் பண்ணுங்க!

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை தொடங்கிவிட்டது. மொபைல் போன் முதல் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

Flipkart
Flipkart

The Flipkart Big Saving Days Sale Begins: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் வருடாந்திர ஆஃபர் விற்பனையைத் தொடங்கியுள்ளது. மொபைல் போன் முதல் அனைத்து பொருட்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்தாண்டு இறுதியில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த முறையில் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் ரூ.12,000 முதல் 5ஜி போன்கள் கிடைக்கிறது. முன்னணி ஸ்மார்ட்போன்களான Realme 10 Pro+, Poco M4, Pixel 6a உள்ளிட்ட போன்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

Poco M4

Poco M4 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. Flipkart Big Saving Days விற்பனையில் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5ஜி அம்சம் கொண்ட இந்த போன் 5,000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது.

Realme 10 Pro+

Realme 10 Pro+ தள்ளுபடி விலையில் ரூ.24,999க்கு பெறலாம். ரூ 25,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ரூ. 1,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 128ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.24,999 ஆகும். MediaTek Dimensity 1080 சிப், 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 5,000mAh பேட்டரி மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளது.

ஐபோனுக்கு ரூ. 10,000 தள்ளுபடி

ஐபோன் 13 மாடல் போன் ரூ.59,999 பெறலாம்.128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் ஆப்பிள் தளத்தில் ரூ.69,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் விற்பனையில் கிட்டத்தட்ட ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Flipkart big saving days sale begins 5g phone deals starting at rs 12000