Flipkart Big Saving Days Sales Tamil News : ஃப்ளிப்கார்ட் பிக் சேவிங் நாள்கள் விற்பனை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. ஐந்து நாட்கள் விற்பனையான இது டிசம்பர் 22 வரை தொடரும். இந்த மெகா விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுக்கு சில சலுகைகளை ஃப்ளிப்கார்ட் கொடுத்துள்ளது. ஐபோன் எக்ஸ்ஆர், போக்கோ எக்ஸ் 3, ரியல்மீ நர்சோ 20 ப்ரோ மற்றும் பல தொலைபேசிகள் ஃப்ளிப்கார்ட் பிக் சேவிங் நாள்கள் விற்பனையின் போது தள்ளுபடியைப் பெறும். இது அநேகமாக 2020-ம் ஆண்டின் கடைசி மிகப்பெரிய விற்பனையாக இருக்கும். ஃப்ளிப்கார்ட் பிரைம் உறுப்பினர்கள் வழக்கம்போல விற்பனைக்கு ஆரம்பக்கால அணுகலைப் பெறுவார்கள். அதாவது, அவர்களுக்கு இந்த சலுகை விற்பனை டிசம்பர் 17-ம் தேதி மதியம் 12:00 மணிக்குத் தொடங்கும்.
எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் பயனர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். வரவிருக்கும் விற்பனையில் ஐபோன் எக்ஸ்ஆர் ரூ.38,999-க்கு கிடைக்கும். இது 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டிற்கான விலையாக இருக்கும். முந்தைய விற்பனையின்போது இதே சாதனம் ரூ.40,999-க்கு விற்கப்பட்டது. ஒப்பிடுகையில், நீங்கள் இன்னும் ஐபோன் எக்ஸ்ஆர் வாங்கவில்லை என்றால், அதனை வாங்க இதுவே சிறந்த நேரம்.
ஒப்பந்தத்தை மேலும் கவர்ந்திழுக்க, விலை இல்லாத ஈ.எம்.ஐ விருப்பங்கள் மற்றும் பரிமாற்ற சலுகைகளையும் ஃப்ளிப்கார்ட் வழங்கும். தற்போது, ஐபோன் எக்ஸ்ஆர் ரூ.44,900-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது 64 ஜிபி வேரியன்ட்டிற்கானது. முன்னோக்கி நகரும் போது, போக்கோ எக்ஸ் 3 ரூ.1000 தள்ளுபடி சலுகையுடன், நீங்கள் சாதனத்தை ரூ.15,999-க்கு வாங்க முடியும். ரியல்மீ-ன் 6 விலை ரூ.12,999 ஆகவும், ரியல்மீ நர்சோ 20 ப்ரோ ஃப்ளிப்கார்ட் பிக் சேவிங் நாட்கள் விற்பனையின் போது ரூ.13,999 தள்ளுபடி விலையிலும் கிடைக்கும்.
விற்பனைக்கு வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஃப் 41, ரூ.15,499 விலையில் கிடைக்கும். இந்த விலை 6 ஜிபி RAM + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கானது. ரியல்மீ 6 ஐ, ரூ.11,999-க்கு விற்கவுள்ளது. இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தின் விற்பனை, தொலைக்காட்சிகளில் 65 சதவிகிதம் வரை தள்ளுபடியும், தெர்மல் சாதனங்களுக்கு 70 சதவிவிகி தள்ளுபடியும், இன்வெர்ட்டர் ஏ.சி.களில் 40 சதவிகித தள்ளுபடியும் அளிக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், லேப்டாப்பில் 40 சதவிகிதம் வரை தள்ளுபடி, ஆடியோ தயாரிப்புகளுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி, ஸ்மார்ட் டிவி இணைக்கக்கூடிய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி மற்றும் ப்ரீமியம் டேப்லெட்டுகளில் 45 சதவிகிதம் வரை தள்ளுபடி தருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Flipkart big saving days sale date iphone xr poco x3 laptop tamil news
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்