/tamil-ie/media/media_files/uploads/2022/11/Flipkart.jpg)
Flipkart
ப்ளிப்கார்ட் முன்னணி ஆன்லைன் பொருட்கள் விற்பனை தளமாகும். வீட்டு உபயோக பொருட்கள், ஐபோன், ஸ்மார்ட்போன்கள், ஆடைகள் முதல் அனைத்துப் பொருட்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது நிறுவனம் தள்ளுபடி விலை விற்பனையை அறிவித்துள்ளது. ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை தொடங்க உள்ளது. மே 5-ம் தேதி முதல் விற்பனை தொடங்க உள்ளது.
பல்வேறு பொருட்களை தள்ளுபடி விலையில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக போன் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு
இது சரியான தருணமாக இருக்கும். ஐபோன் முதல் முன்னணி ஸ்மார்ட்போன்கள் வரை பல்வேறு பொருட்களுக்கு சிறந்த முறையில் ஆஃபர் வழங்கப்படுகிறது. மே 5-ம் தேதி தொடங்கும் விற்பனை மே 10-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது Pixel 6a ஸ்மார்ட்போன் ரூ.25,999 மற்றும் Realme GT Neo 3T ரூ.19,999 விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Poco X5 Pro சில சலுகைகளுடன் ரூ.20,999க்கு வாங்கலாம்.
Realme 10 Pro+ 5ஜி ஸ்மார்ட்போன் 22,999 ரூபாய்க்கு வாங்க முடியும். பட்ஜெட் போனான Realme C55 ரூ.7,999 விலையில் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.