பிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே விற்பனை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு விற்பனையின் ஹீரோ ஐபோன் 15 ஆகும். இது தள்ளுபடி விலையில் ரூ. 57,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஐபோன் 15 ரூ.65,499க்கு விற்பனையாகிறது.
விற்பனையின் போது, பயனர்கள் குறிப்பிட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி no-cost EMI திட்டங்கள், எக்ஸ்சேஞ்ச் ஆபர்களுடன் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி பெறலாம்.
தவிர, ஐபோன் 15 ப்ரோ ரூ. 1,03,999 தள்ளுபடி விலையில் கிடைக்கும், மேலும் இது ஆப்பின் நுண்ணறிவு (Apple Intelligence) கொண்டுள்து. AAA கேமிங்ஸ், ஆக்ஷன் பட்டன் உள்ளிட்டவை இருக்கும்.
நீங்கள் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் போன் வாங்க வேண்டும் என்றால், கேலக்ஸி எஸ்23 எஃப்இ போன்ற போன்களுக்கும் பிளிப்கார்ட் சிறந்த சலுகைகளைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்23 எஃப்இ இந்த பிளாக் ஃபிரைடே விற்பனையில் ரூ.29,999க்கு கிடைக்கும். இதேபோல், கேலக்ஸி எஸ்24 பிளஸ் ரூ.64,999க்கு கிடைக்கும்.
மேலும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கும் சலுகைகள் உள்ளன. நத்திங் ஃபோன் (2a) போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்கள் ரூ.21,999 க்கு விற்பனை செய்யப்படகிறது.
அதோடு குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போன்கள் வேண்டும் என்றால் vivo T3 5G Lite உள்ளது. இது இந்த விற்பைனையில் ரூ.9,499க்குக் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“