வந்துட்டாங்கல்ல… தீபாவளிக்கு பிளிப்கார்ட் சலுகைகள்

டி.வி மற்றும் பிற வீட்டு உபகரணங்களுக்கான பணத்தை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், அவற்றை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்.

Flipkart diwali offers Tv Smartphone laptop sales october 29 tamil tech news
Flipkart diwali offers

Flipkart Diwali sale Tamil Tech News: ஃப்ளிப்கார்ட் அதன் தற்போதைய தசரா சிறப்பு விற்பனையை முடித்து, விரைவில் அதன் மிகப்பெரிய தீபாவளி விற்பனையைத் தொடங்க தயாராக உள்ளது. இந்த பண்டிகை விற்பனை அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி நவம்பர் 4-ம் தேதி வரை தொடரும். விற்பனையின் போது, ஆக்சிஸ் வங்கி க்ரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்கவுள்ளது. பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பிற முன்னணி வங்கிகளான எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்பிஐ உள்ளிட்டவற்றில் விலை இல்லா EMI விருப்பங்களும் இருக்கும்.

ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் போது பொருள்கள் வாங்க நினைப்பவர்கள், பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீது அதிக தள்ளுபடியைக் காணலாம். சாம்சங் கேலக்ஸி எஃப் 41, சாம்சங் கேலக்ஸி எம் 31, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 +, சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ், சாம்சங் கேலக்ஸி A50s போன்ற தொலைபேசிகள் விற்பனைக்கு வரும். ரியல்மீ ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான திட்டம் இருந்தால், இந்த சலுகையில் ஏராளமான ஆப்ஷன்களை பெறுவீர்கள். ரியல்மீ C15, ரியல்மீ நர்சோ 20, ரியல்மீ நர்சோ 20 ப்ரோ மற்றும் பிற சாதனங்கள், “சிறந்த தள்ளுபடியுடன்” கிடைக்கும். போகோ எம்2 ப்ரோ, ஒப்போ ரெனோ 2F, ஐஃபோன் எக்ஸ்ஆர் மற்றும் பிற தொலைபேசிகளிலும் சிறந்த தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.

தொலைபேசிகளைத் தவிர, ஸ்மார்ட்வாட்சுகள் மற்றும் ஃபிட்னெஸ் பேண்டுகளுக்கு 70 சதவிகிதம் வரை ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி அளிக்கவுள்ளது. இந்த சாதனங்கள், ரியல்மீ, ஷியோமி, நாய்ஸ், ஆப்பிள், ஃபிட்பிட் மற்றும் அமேஸ்ஃபிட் போன்ற பிராண்டுகளிலிருந்து கிடைக்கும். தற்போதைய சூழ்நிலையில் பலர் வீட்டிலிருந்து வேலை செய்வதால் லேப்டாப் வைத்திருப்பது அவசியம். அதனால்தான், அதன்மீது ஃப்ளிப்கார்ட் 50 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கவுள்ளது. ஹெச்பி பெவிலியன், ஆப்பிள் மேக்புக் ஏர், ஏசர் ஆஸ்பியர், ஏசஸ் விவோபுக், ஆப்பிள் மேக்புக் ப்ரோ, டெல் இன்ஸ்பிரான் போன்ற லேப்டாப்புகள் விற்பனைக்கு வரவிருக்கிறது.

டி.வி மற்றும் பிற வீட்டு உபகரணங்களுக்கான பணத்தை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், அவற்றை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம். ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் ரியல்மீ, எல்ஜி, சாம்சங், ஷியோமி மற்றும் பிற தொலைக்காட்சிகளில் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஃப்ரிட்ஜ், மைக்ரோ வேவ் ஓவன், வாஷிங் மெஷின் மற்றும் பிற சமையலறை உபகரணங்களிலும் சலுகைகள் இருக்கும்.

தயாரிப்புகளில் கூடுதல் தள்ளுபடியைப் பெற எக்ஸ்செஞ் சலுகைகளும் உள்ளது. மேலும், தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற தயாரிப்புகளில் காலை 12:00, காலை 8:00 மற்றும் மாலை 4:00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனையும் இருக்கும். கூடுதலாக, மிகக் குறைந்த விலை விற்பனை அதிகாலை 2:00 மணி வரை நேரலையில் இருக்கும். மீதமுள்ள விவரங்கள் தற்போது மறைத்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் சிறந்த சலுகைகளை ஃப்ளிப்கார்ட் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் அனைத்து புதுப்பிப்புகளை உடனுக்குடன் பெற இந்தியன் எக்ஸ்பிரஸில் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Flipkart diwali offers tv smartphone laptop sales october 29 tamil tech news

Next Story
ரூ10,000 விலைக்குள் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்: பெஸ்ட் எதுன்னு பாருங்க!Realme Redmi Poco Budget mobile phones under 10,000 tamil tech news 
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com