Flipkart launches Falkon Aerbook thin : ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டான் இன்று அறிமுகமாகியுள்ளது. ரூ. 39,990க்கு அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8-ஜெனரேசன் இண்டெல் கோர் ஐ5 ப்ரோசசர் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
மார்க் என்ற பெயரின் கீழ் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் லேப்டான் இதுவாகும். இது முழுக்க முழுக்க கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ப்ரோடெக்ட்டுகளை மட்டுமே கவனித்தில் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ப்ரைவேட் பிராண்ட்ஸ் பிரிவின் மூத்த தலைவர் ஆதர்ஷ் மேனன் அறிவித்துள்ளார்.
இந்த ஃபால்கன் ஏர்புக் 16.5 எம்.எம். ஸ்லிம் டிசனைக் கொண்டுள்ளது. இதன் எடை 1.26 கிலோ கிராம்கள் ஆகும். இதில் 13.3 இன்ச் புல் எச்.டி. திரை கொண்டுள்ளது. இத்துடன் ஃபுல் சைஸ் கீபோர்ட் மற்றும் ப்ரெசிசன் டச்போர்ட், 8ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் 1டிபி வரைக்கும் உயர்த்திக் கொள்ளலாம்.
தற்போது இந்த லேப்டாப்பினை 10000க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வாங்கிக் கொள்ள முடியும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாடிக்கையாளர்கள் தங்களின் சந்தேகங்களை தெரிவுபடுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் அமெரிக்காவில் லாஸ்வேகஸில் நடைபெற்றுவரும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க : ப்ரீபெய்ட் கட்டணங்கள் பற்றிய கவலையா? வந்துவிட்டது ஜியோவின் வை-ஃபை கால்கள்!