ப்ளிப்கார்ட் நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கி உடன் இணைந்து,"@fkaxis" என்ற புதிய யு.பி.ஐ வசதியை இன்று (மார்ச் 3) அறிமுகம் செய்தது. ‘India’s Most Rewarding UPI’ என்ற டேக்லைனையும் வழங்கியுள்ளது. இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளிப்கார்ட் ஆப் பக்கம் சென்று புதிய யு.பி.ஐ ஐ.டி பதிவு செய்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
ப்ளிப்கார்ட் ஆனது ஒரே கிளிக்கில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் கட்டணத்தை செயலியில் செலுத்துவதற்கான வசதியை வைத்துள்ளது. இதன் மூலம் விரைவாக கட்டணங்களை செலுத்தலாம். அதே போல் டெபிட் கார்டு மட்டும் இல்லாமல் இதில் ப்ளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டும் பயன்படுத்தலாம்.
பயனர்கள் எந்த வங்கி கணக்கையும் பயன்படுத்தி ப்ளிப்கார்ட் யு.பி.ஐ-ல் பதிவு செய்து பணப் பரிவர்த்தனை செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“