சாம்சங், எல்.ஜி… நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க!

இதுவரை தொடங்கிய சலுகைகள் பட்டியல் இங்கே இருக்கின்றன. இது நிச்சயம் நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது கைகொடுக்கும்.

By: Updated: October 8, 2020, 02:15:35 PM

Flipkart Mobile Phone Offers Tamil News: புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் நீங்கள் எதிர்நோக்க வேண்டியது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையைத்தான். அக்டோபர் 16 முதல் 21 வரை வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு பிரிவுகளின் தொலைபேசிகளில் பல சலுகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்களின் ஸ்மார்ட்போன், சமீபத்திய பதிப்பாக இருக்கவேண்டும் என்பதில்லை. சில நேரங்களில், ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் கூட அதன் கேமிங், புகைப்படம், உள்ளடக்க உருவாக்கம் அல்லது வணிக நோக்கங்களுக்காகச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யும். இதுவரை தொடங்கிய சலுகைகள் பட்டியல் இங்கே இருக்கின்றன. இது நிச்சயம் நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது கைகொடுக்கும்.

Flipkart Mobile Phone Offers: சாம்சங் கேலக்ஸி எஸ்20+

சாம்சங்கின் முதன்மை எஸ்20 சீரிஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று தொலைபேசிகளில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி எஸ்20+, ரூ.49,999-க்கு கிடைக்கும். இந்த முதன்மை சாதனம் தற்போது சாம்சங் இந்தியா இணையதளத்தில் ரூ.77,999-ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. 6.7 இன்ச் டைனமிக் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் குவாட் HD + ரெசல்யூஷனுடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் சாம்சங் எஸ்20+ வருகிறது. இது, 8 GB RAM மற்றும் 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைந்து எக்ஸினோஸ் 990 ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB  வரை விரிவாக்கக்கூடியது. அண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது. பின்புறத்தில், 64MP பிரதான சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், பஞ்ச் ஹோல் 10MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 4,500 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன.

Flipkart Mobile Phone Offers: எல்ஜி G8X ThinQ

LG G8X ThinQ வெறும் ரூ.19,999-க்கு கிடைக்கும். இந்த மொபைல், மடிக்கக்கூடிய இரட்டை ஸ்க்ரீனை கொண்டிருக்கிறது. ஆனால், இரண்டு ஸ்க்ரீனையும் பிரிக்கும் பகுதி சற்று தடிமனாக இருக்கும். இந்த தொலைபேசி ரூ.49,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டு, ஜிஎஸ்டி விகிதங்கள் திருத்தப்பட்டபோது ரூ.54,999-ஆக அதிகரித்தது. கேமிங்கிற்கு சிறந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசசர் மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது. 6 GB RAM மற்றும் 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் 2 TB வரை விரிவாக்கக்கூடியது. 6.4 அங்குல முழு HD+ OLED டிஸ்ப்ளேவுடன் 2340 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. 12MP முதன்மை கேமரா மற்றும் 13MP அகல-கோண சென்சாருடன் பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் உள்ளன. செல்ஃபிக்களுக்கு 32 MP கேமரா இருக்கிறது. இவை அனைத்தும் 4,000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

Flipkart Mobile Phone Offers Tamil News, Flipkart big billion sale tamil news latest LG G8X ThinQ(Express Photo: Nandagopal Rajan)

Flipkart Mobile Phone Offers: மோட்டோ ஜி9

அதிகப்படியான சலுகை இதில் இல்லை என்றாலும், நல்ல விலையில் இந்த மொபைல் கிடைக்கும். மோட்டோ ஜி9 ஃப்ளிப்கார்ட்டில் ரூ.9,999-க்கு கிடைக்கும். இது, 2020 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்த விலையை விட தற்போது ரூ.1,500 குறைவு. 6.5 இன்ச் HD+ IPS TFT LCD மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்சுடன் மோட்டோரோலா ஜி9 மொபைல் வருகிறது. இதில், ஆக்டா கோர் 2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ப்ராசசர் உள்ளது. இது சாதாரண கேமிங்கிற்கு போதுமானதாக இருக்கும். 4GB RAM மற்றும் 64 GB உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் 512 GB வரை விரிவாக்கக்கூடியது. பின்புறத்தில், 48MP பிரதான சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 8MP கேமரா உள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி மற்றும் 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்பு இருக்கிறது.

Flipkart Mobile Phone Offers: சாம்சங் நோட் 10 பிளஸ்

புதிய நோட் 20 சீரிஸ் அறிமுகத்தில் சிறந்த தோற்றமுடைய மற்றும் தனித்துவமான முதன்மை தொலைபேசிகளில் ஒன்றுதான் இந்த சாம்சங் நோட் 10 பிளஸ். 6.8 இன்ச் டைனமிக் அமோலேட் இன்ஃபினிட்டி O டிஸ்ப்ளே QHD + ரெசல்யூஷன் மற்றும் HDR 10+ உடன் சாம்சங் நோட் 10 பிளஸ் வருகிறது. சாம்சங் எக்ஸினோஸ் 9 ஆக்டா 9825 சிப்செட் மூலம் 12 GB RAM மற்றும் 256 GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை 1TB வரை விரிவாக்கிக்கொள்ளலாம். பின்புறத்தில், 12MP + 12MP + 16MP டிரிபிள்-கேமரா அமைப்பு உள்ளது. இவை அனைத்தும் 4,500 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இந்த சாதனம் ரூ.79,999-க்கு வெளியிடப்பட்டது. விற்பனையின் போது ரூ.54,999-க்கு கிடைக்கும்.

Flipkart Mobile Phone Offers Tamil News, Samsung Galaxy Note 10+ Tamil News Samsung Galaxy Note 10+

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Best smartphone deals in flipkart big billion days tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X