6000mAh பேட்டரி, 50எம்.பி கேமரா: ரூ.12,000 விலையில் சாம்சங் 5ஜி போன்: பிளிப்கார்ட் தள்ளுபடியை பாருங்க

சாம்சங் கேலக்ஸி F34 5ஜி போன் பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் ரூ.12,000க்கும் குறைவான விலையில் பெறலாம்.

author-image
WebDesk
New Update
Samsung Galaxy S23.jpg

பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் இந்தாண்டிற்கான தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனையை இந்த மாத இறுதியில் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. 

Advertisment

இந்த நிலையில் ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள்,  உடைகள் உள்பட பல்வேறு  பொருட்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது தள்ளுபடி விற்பனை தொடங்கும் முன்னதாகவே, நிறுவனம் சாம்சங் கேலக்ஸி போனுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி F34 5ஜி போன் பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் ரூ.12,000க்கும் குறைவான விலையில் பெறலாம்.

சிறப்பம்சங்கள்

Advertisment
Advertisements

சாம்சங் கேலக்ஸி எப் 34 5ஜி ஸ்மார்ட்போன்  6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதோடு தனியாக எக்ஸ்டர்னல் மெமரி கார்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி கொண்டது. முன்பக்கத்தில் 3எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.  மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) உள்ளது.  இந்த போன் 6000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை  ஆதரிக்கிறது. 

விலை 

பிளிப்கார்ட்தள்ளுபடி விற்பனையில்  சாம்சங் கேலக்ஸி எப் 34 5ஜிபோன் 46 சதவீதம் தள்ளுபடி உடன் ரூ.12,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் குறிப்பிட்ட வங்கி சலுகைகளைப் பயன்படுத்தி மேலும் குறைந்த விலைக்குப் போனை பெறலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: