Advertisment

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை: அசத்தல் ஆஃபர்; ஐபோன் 15-க்கு இத்தனை சதவீதம் தள்ளுபடியா!

பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே விற்பனையில் ஐபோன் 15 புதிய மாடல் போன் முதல் சாம்சங், கூகுள் போன் வரை பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
iphone15.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே விற்பனை தொடங்கி உள்ளது.  ஐபோன் முதல் ஆண்ட்ராய்டு போன்கள் வரை அனைத்திற்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 நாள் ஷாப்பிங் திருவிழா நேற்று ஜனவரி 14-ம் தேதி தொடங்கி ஜனவரி 19-ம் வரை நடைபெறுகிறது. பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி முதல் ஆஃபர் வழங்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் ஐபோன் 15, ஐபோன் 14, ஐபோன் 13 போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்துப் பார்ப்போம். 

ஐபோன் 15

செப்டம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15, 128GB மாடலின் விலை ரூ.79,900 ஆகும், மேலும் பிளிப்கார்ட்-ல்  இந்த போன் 8 சதவீத தள்ளுபடியில் ரூ.72,999-க்கு வழங்குகிறது.   EMI மற்றும் EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு HDFC வங்கி கிரெடிட் கார்டில் தள்ளுபடிகள் உள்ளன. HDFC டெபிட் கார்டு உள்ள நுகர்வோர் EMI பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி பெறலாம்.

ஐபோன் 14

2022-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 போன் 128 ஜிபி விலை ரூ.69,900, இருப்பினும், பிளிப்கார்ட்டில், 15 சதவீத தள்ளுபடியுடன் ரூ.58,999 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. நுகர்வோர் ரூபாய் 54,990 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியைப் பெறலாம். தவிர, பாங்க் ஆப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ஏராளமான வங்கிச் சலுகைகள் உள்ளன.

ஐபோன் 13

ஐபோன் 13 விலை ரூ.59,900 மற்றும் பிளிப்கார்ட்டில் இந்த தள்ளுபடி விற்பனையில் ரூ.52,999 பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ரூ.44,400 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ.3,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், HDFC மற்றும் Axis வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடிகள் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

 

Iphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment