Advertisment

4K ஸ்மார்ட் டிவியை ரூ. 20,000க்கு வாங்க முடியுமா? ஃப்ளிப்கார்ட்டின் அதிரடி தள்ளுபடி!

இது ஸ்மார்ட் டிவிகளுக்கான காலம்... ஆயிரக்கணக்கில் தள்ளுபடியை வழங்கும் ஃப்ளிப்கார்ட் ரிபப்ளிக் சேல்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flipkart Republic Day sale Samsung, Vu, Xiaomi TVs

Flipkart Republic Day sale Samsung, Vu, Xiaomi TVs

Flipkart Republic Day sale : வருகின்ற 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தினவிழாவிற்கான சிறப்பு விற்பனையை அறிமுகம் செய்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகள், மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கலை குறைவான விலைக்கு விற்பனை ச்3ய்து வருகிறது.

Advertisment

தற்போது ஸ்மார்ட் டிவிகளுக்கான காலம். ஃப்ளிப்கார்ட் தற்போது 10% வரை ஸ்மார்ட்டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடியை பெற வாடிக்கையாளர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அல்லது கோடாக் மஹிந்த்ரா டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட்களை கொண்டிருக்க வேண்டும்.

தாம்சன் நிறுவனத்தின் R9 24-இன்ச் டிவியை வெறும் ரூ. 4,999க்கு விற்பனை செய்கிறது எல்.இ.டி டிவி. நான்-ஸ்மார்ட் டிவியில் இருந்து ஸ்மார்ட்டிவிக்கு மாற விரும்பினால் நிச்சயமாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்.

தாம்சன் நிறுவனத்தின் 49 இன்ச் அல்ட்ரா HD (4K) எல்.ஈ.டி. டிவியின் விலை ரூ. 26,999 ஆகவும், Thomson UD9 50 இன்ச் அல்ட்ரா எச்.டி (4K) எல்.ஈ.டி. ஸ்மார்ட் டிவியின் விலை ரூ. 24,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi LED Smart TVs

சியோமி எல்.ஈ.டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி 4A Pro 43 இன்ச் கொண்டது. இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் 20,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். அதே போன்று சாம்சங் நிறுவனத்தின் சீரிஸ் 4 32 இன்ச் எச்.டி. ரெடி எல்.இ.டி ஸ்மார்ட் டிவியை வெறும் 13,999-க்கு வாங்கிக் கொள்ளலாம்.

சியோமியின் எம்.ஐ. எல்.ஈ.டி ஸ்மார்ட் டிவி 4Aவும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய தள்ளுபடி விலை ரூ. 28,999 ஆகும். ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் கோடாக் மகிந்திரா கார்டுகளுக்கு 10% கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : எப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்?

Vu Pixelight

Vu Pixelight நிறுவனம் வழங்கும் 43 இன்ச் அல்ட்ரா எச்.டி. எல்.ஈ.டி ஸ்மார்ட் டிவியையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது ஃப்ளிப்கார்ட். 4கே ரெசலியூசன் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியை நீங்கள் வெறும் 20,999க்கு வாங்கிக் கொள்ளலாம் என்றால் பாருங்களேன். மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ அல்லது கோடாக் பேங்க் கார்டுகளை கொண்டு வாங்கப்படும் டிவிகளுக்கு மேலும் சில சலுகைகளை வழங்குகிறது ஃப்ளிப்கார்ட்.

இதே நிறுவனத்தில் மற்றொருமொரு டிவிக்கும் சலுகை விலை உண்டு. 55-இன்ச் அளவு கொண்ட இந்த அல்ட்ரா எச்.டி. ஸ்மார்ட்போனின் விலையோ வெறும் ரூ. 28,999 மட்டுமே. கோடாக் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கார்டுகள் கொடுத்து வாங்கும் போது உங்களுக்கு மேலும் கூடுதலாக சில சலுகைகள் கிடைக்கும்.

 

Samsung Lg
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment