ஃப்ளிப்கார்ட் தீபாவளி ஆஃபர் தொடங்கியது: மொபைல், லேப்டாப் 50% வரை தள்ளுபடி

Flipkart Tamil News: தினமும் காலை 12 மணி முதல் 12 மணி வரை “தமகா சலுகைகள் வழங்கவுள்ளது.

By: October 30, 2020, 9:00:02 AM

Flipkart Diwali Megasale offers Tamil News: ஃப்ளிப்கார்ட்டின் தீபாவளி விற்பனை வருகிற அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி நவம்பர் 4 வரை தொடர இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை அக்டோபர் 29-ம் தேதி காலை 12 மணிக்குத் தொடங்கியது. இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டுச் சேர்ந்து, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்கவிருக்கிறது. கூடுதலாக, பஜாஜ் ஃபின்சர்வ், எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கார்டுகள் வழியாக வாங்கும் கட்டணங்களுக்கும் விலை இல்லா ஈ.எம்.ஐ சலுகைகளையும் வழங்க உள்ளது.

விற்பனையின் போது, ஃப்ளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்களில் 80 சதவிகிதம் வரையிலும் மற்றும் டிவி மற்றும் உபகரணங்களில் 80 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடியை வழங்கும். இது தவிர, வாடிக்கையாளர்களுக்குத் தினமும் காலை 12 மணி முதல் 12 மணி வரை “தமகா சலுகைகள்”, “மஹா பிரைஸ் டிராப்” ஒப்பந்தங்கள் மற்றும் அக்டோபர் 29 அன்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை “ரஷ் ஹவர்” சலுகைகளையும் வழங்கவுள்ளது.

Flipkart offers: ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனை

ஆப்பிள் ஐபோன் XR 64 ஜிபி வேரியன்ட், ரூ.39,999 விலையிலும், ரியல்மீ நர்சோ 20 ப்ரோ ரூ.13,999 விலையிலும், போகோ சி3 அதன் 3 ஜிபி RAM வேரியன்ட் ரூ.7,499 விலையிலும் மற்றும் 4 ஜிபி RAM வேரியன்ட் ரூ.8,499 விலையிலும் கிடைக்கும்.

ஐபோன் SE பேஸ் வேரியன்ட் ரூ.32,999-ல் தொடங்கும். பிரீமியம் தொலைபேசிகளில் வரும் மோட்டோ ரேஸ்ர் 2019 மொபைலை ரூ.84,999 விலையிலும், சாம்சங் கேலக்ஸி நோட் 10+ ஸ்மார்ட்போனை ரூ.59,999 விலையிலும், மோட்டோரோலா எட்ஜ்+ போனை ரூ.64,999 விலையிலும் பெறலாம்.

எல்ஜி G8X மொபைலின் வழக்கமான விற்பனை விலையான ரூ.54,990-லிருந்து, ரூ.24,990 விலையில் விற்பனைக்கு வருவது விற்பனையின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று. இந்த சாதனம் ஆரம்பத்தில் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது ரூ.19,990-க்கு கிடைத்தது, பின்னர் ரூ.21,990 வரை உயர்த்தப்பட்டது.

விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளில் முறையே 50 சதவிகிதம் மற்றும் 45 சதவிகிதம் தள்ளுபடி எனப் பல பிரிவுகளில் சலுகைகளைப் பெற முடியும். டேப்லெட் மற்றும் லேப்டாப் சலுகைகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Flipkart diwali special sales tv mobile electronics offers tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X