/indian-express-tamil/media/media_files/3Y8HeoNu0RDQQ5Cbgs3D.jpg)
'மகாத்மா காந்தி அரசியல் சுதந்திரத்திற்காக போராடினார். இன்று நமக்கு பொருளாதார சுதந்திரம் தேவையாக இருக்கிறது. ' என்று திருச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
க.சண்முகவடிவேல்
Nirmala Sitharaman | Trichy: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் மகாத்மா காந்தி சிலையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கல்லூரி மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சென்று சேர்ந்துள்ளது. இதனை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. மகாத்மா காந்தி அரசியல் சுதந்திரத்திற்காக போராடினார். இன்று நமக்கு பொருளாதார சுதந்திரம் தேவையாக இருக்கிறது. தற்சார்பு பொருளாதார சுதந்திரத்திற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். அவ்வாறு உழைக்கும் போது 2047 ஆம் ஆண்டில் இந்தியா முன்னேறிய நாடாக மாறும்.
முன்னேற்றத்தில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட முடியாது. சீனாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. ஆனால், இந்தியாவில் சுதந்திரம், ஜனநாயகம் உள்ளிட்டவை மதிப்பு மிகுந்ததாக உள்ளது. சீனாவில் செய்த அனைத்தையும் இந்தியாவில் செய்ய முடியாது.
பொருளாதாரத்தில் இந்தியா பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவோம் மூன்றிலிருந்து நல்ல நிலைக்கு முன்னேறுவோம் அதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.