/indian-express-tamil/media/media_files/2025/10/23/chatgpt-atlas-ai-2025-10-23-21-55-52.jpg)
இனி கூகுள் ப்ரௌசிங் தேவையில்லை... சாட்ஜிபிடி-யின் அதிநவீன ஏ.ஐ. ப்ரௌசர் அறிமுகம்! 5 முக்கிய அம்சங்கள்!
சாஃப்ட்வேர் துறையில் பெரும் போட்டியைக் கிளப்பியுள்ள ஓபன் ஏ.ஐ. நிறுவனம், சாட்ஜிபிடி மற்றும் சோரா-வைத் தொடர்ந்து, தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களைக் கொண்ட 'அட்லஸ்' (Atlas) என்ற புதிய ப்ரௌசரை (Browser) அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ.ஐ.-யை அடிப்படையாகக் கொண்ட இந்த ப்ரௌசர் இணையப் பயன்பாட்டு அனுபவத்தை மேம்பட்டதாகவும், சீரானதாகவும் மாற்றும் என்று உறுதியளிக்கிறது. இந்த அட்லஸ் ப்ரௌசரை யார் பயன்படுத்த முடியும்? எப்படித் தொடங்குவது? என்பது குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அட்லஸ் ப்ரௌசரை யார் பயன்படுத்தலாம்?
அட்லஸ் ப்ரௌசரை தற்போது மேக் (Mac) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ப்ரௌசர் பயன்பாட்டிற்கு இலவசம் என்றாலும், அதன் முக்கியச் சிறப்பம்சமான 'ஏஜென்ட் மோடு' (Agent Mode), ப்ரோ (Pro), ப்ளஸ் (Plus) மற்றும் எண்டர்பிரைஸ் (Enterprise) சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எதிர்காலத்தில் iOS, ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் அட்லஸைக் கொண்டுவர ஓபன் ஏ.ஐ. உறுதியளித்துள்ளது.
இனிமேல் இணையப் பக்கங்களைப் பார்ப்பது என்பது வெறும் தேடலாக இருக்காது; அது உங்க தனிப்பட்ட ஏ.ஐ. துணையுடன் இணைந்து செய்யும் ஓர் அனுபவமாக இருக்கும். இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக்கை முந்தியடித்த சாட்ஜிபிடி-யை உருவாக்கிய நிறுவனம், அடுத்த தலைமுறை இணையப் பயன்பாட்டிற்காகக் கொண்டு வந்துள்ள இந்த அட்லஸ் ப்ரௌசர் உங்களை எப்படி வசீகரிக்கப் போகிறது என்று பார்க்கலாம். அட்லஸ் ஒரு சாதாரண பிரவுசர் அல்ல. இதில் உள்ள 5 முக்கிய அம்சங்கள், உங்க வேலையை நொடிகளில் முடித்து வைக்கும் திறன்கொண்டது.
1. நீங்க ஒரு வெப்சைட்டில் படித்துக் கொண்டிருக்கும்போதே, உங்க பிரவுசரின் பக்கவாட்டில் (Sidebar) சாட்ஜிபிடி ஒரு துணைவன் போல எப்போதும் காத்திருக்கும். கடிதமா? கோடிங்கா? மின்னஞ்சல்களை டிராஃப்ட் செய்யவோ, உலாவிக்குள்ளேயே கோடிங் எழுதவோ, ஃபார்ம்களை ஆட்டோஃபில் செய்யவோ இனி டாப் மாற்றத் தேவையில்லை. நீண்ட கட்டுரையைப் படிக்கச் சோம்பேறித்தனமா? உடனே சாட்ஜிபிடி ஐகானைக் கிளிக் செய்து, அதன் சுருக்கத்தை அல்லது அது குறித்த கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம்.
2. அட்லஸின் மிகச்சிறந்த அம்சம் இதன் 'மெமரி'. நீங்க எந்தெந்த தளங்களைப் பார்த்தீர்கள், என்னென்ன விஷயங்களைச் செய்தீர்கள் என்பதை இது நினைவில் வைத்திருக்கும். கடந்த வாரம் நான் பார்த்த அனைத்து வேலைப் பதிவுகளையும் தேடி, நேர்காணலுக்குத் தயாராக தொழில் போக்குகளின் சுருக்கத்தை எனக்கு உருவாக்கு என்று நீங்க கேட்கலாம். ஒரு தனி உதவியாளரைப் போல, உங்க கடந்தகாலச் செயல்பாடுகளை வைத்தே இது வேலையை முடிக்கும்.
3. அட்லஸில் நீங்க தேடல் பட்டியில் டைப் செய்தால், அது கூகிள் அல்லது பிங்-க்கு செல்லாமல், நேரடியாக சாட்ஜிபிடி-க்கே செல்லும். இது, தேடல் முடிவுகளை வெறும் லிங்குகளாகத் தராமல், உங்களுக்கு ஏற்ற உரையாடல் பதில்களைத் தரும். மேலும், தேடல் முடிவுகளைக் கிளிக் செய்தால், அந்த இணைப்பும் சாட் சைட்பாரும் திரையில் பாதியாகப் பிரிந்து காட்டப்படும்.
4. அட்லஸின் சூப்பர் பவர் இதுதான். சாட்ஜிபிடி இப்போது ஒரு 'ஏஜென்ட்' போல செயல்படும். இந்த ஏஜென்ட் மோடு உங்க சார்பாகப் பல படிநிலை கொண்ட சிக்கலான வேலைகளைச் செய்து முடிக்கும். உணவகங்களில் முன்பதிவு செய்வது, மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது, பர்ச்சேஸ் லிஸ்ட்டுகளை உருவாக்குவது, ஒப்பீடுகள் செய்வது என அனைத்து மல்டி-ஸ்டெப் பணிகளையும் இது கவனித்துக் கொள்ளும். இந்த வசதி தற்போது ப்ரோ/ப்ளஸ்/எண்டர்பிரைஸ் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
5. மின்னஞ்சல் அல்லது டாக்குமெண்ட்களில் ஒரு வரியைத் தேர்ந்தெடுத்து, அதை மெருகூட்டவோ அல்லது எழுத்து நடையை மாற்றவோ நீங்க இனி சாட்ஜிபிடி டேபிற்குப் போக வேண்டியதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திலேயே சாட்ஜிபிடி ஐகானைக் கிளிக் செய்து, உள்ளுர (In-line) திருத்தங்களைச் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us