பாஸ்வேர்ட் மறப்பது நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக நம் வீட்டிற்கு யாராவது வரும் போது வைஃபை பாஸ்வேர்ட் கேட்கும் போது இதை அனுபவித்து இருப்போம். கவலை வேண்டாம். வைஃபை கனெக்ட் செய்யப்பட்ட உங்கள் போன் மூலம் மறந்து போன உங்க வைஃபை பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்கலாம்.
ஆண்ட்ராய்டு
ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால் இந்த ஸ்டெப்ஸ் பின்பற்றலாம். கூகுள் பிக்சல் போன் பயனர்கள் செட்டிங்க்ஸ் சென்று > நெட்வொர்க் > இன்டர்நெட் கிளிக் செய்யவும். அடுத்து வைஃபை நெட்வொர்க் என்ற இடத்தில் உள்ள gear icon கொடுக்கவும். இதை கிளிக் செய்த பின் வேறு ஒருபக்கம் சென்று QR code உடன் வைஃபை பாஸ்வேர்ட் உள்ளிட்ட லாக்கின் விவரங்கள் காண்பிக்கப்படும்.
அடுத்து சாம்சங் மற்றும் மற்ற ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை செய்யலாம். செட்டிங்க்ஸ்> கனெக்ஸன்ஸ் > வைஃபை கொடுக்கவும். அதே போல் வைஃபை நெட்வொர்க் என்ற இடத்தில் உள்ள gear icon கொடுக்கவும். அடுத்து eye ஐகான் காண்பிக்கப்படும் அதை கொடுத்து உங்கள் identity உறுதி செய்யவும். அதன்பின் பாஸ்வேர்ட் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“