புதிய நிறுவனத்தை ஆரம்பித்தார் யாகூ நிறுவனத்தின் முன்னாள் சி.இ ஓ மரிசா மேயர்!

பதவி விலகும் போது அவரின் சம்பளம் மில்லியன் கணக்கில் இருந்தது.

யாகூ (YAHOO) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான மரிசா மேயர் அதந்து புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

யாகூ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான மரிசா மேயர் இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்தவர். கூகுள் நிறுவனத்தில் 13 வருடங்கள் பணியாற்றி பல முக்கியமான முடிவுகளையும் மரிசா எடுத்திருந்தார்.

அதன் பின்பு, கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் மரிசா யாகூ (YAHOO) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.PB&J என்ற புதிய ஆன்லைன் திட்டத்தையும் மரிசா அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டில் பார்ச்சூன் பத்திரிகையின் (Fortune Magazine) அமெரிக்காவின் 100 வலிமை மிக்க பெண்களின் பட்டியலில் மரிசா  முதலிடத்தை பெற்றார்.  இந்நிலையில், திடீரென்று மரிசா யாகூவின் சி இ ஓ பதவியில் இருந்து விலகினார்.அவர் பதவி விலகும் போது அவரின் சம்பளம் மில்லியன் கணக்கில் இருந்தது.

அதன் பின்பு, மெரிசா தனது கணவருடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருவதாக செய்திகள் வெளியாகின, இந்நிலையில், மரிசா மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பை தெரிவித்துள்ளார்.  புதியதாக தொழில் முனைவோரை வைத்தே  இந்த  புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close