Advertisment

வீடியோ கேம் விளையாடினால் கோடீஸ்வரன் ஆகமுடியுமா ? என்ன சொல்கிறார் டெய்லர் ப்லேவின்ஸ் ?

ஃபோர்ட்நைட் பேட்டில் ராயல் கேமை விளையாடும் டெய்லர் ப்லேவின்ஸ்சின் கடந்த ஆண்டு வருமானம் 10 மில்லியன் டாலர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fortnite Battle Royale Player Tyler Blevins

Fortnite Battle Royale Player Tyler Blevins

Fortnite Battle Royale Player Tyler Blevins : ட்விட்ச் சமூக வலைதளத்தின் மிகவும் பிரபலமான நிஞ்சா தான் இந்த டைலர் ப்லேவின்ஸ். வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்திருக்கிறாராம்.

Advertisment

ஃபோர்ட்நைட் : பேட்டில் ராயல் என்ற கேம் விளையாட்டை மிகவும் தீவிரமாக விளையாடி வரும் இந்நபர், அந்த வீடியோ கேம் விளையாட்டுகளை ஸ்பான்ஸ்சர்கள் பெயருடன் யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் படிக்க : 200 மில்லியன் கேமர்களுடன் ஃபோர்ட்நைட் பேட்டில் ராயல்

Fortnite Battle Royale Player Tyler Blevins - $10 மில்லியன் வருமானம்

இவருடைய யூடியூப் சேனலுக்கு 20 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். ட்விட்சில் 12.5 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.  இவரின் வீடியோக்களுக்கு அதிகளவு வியூக்கள் வரவும், அதிகமான விளம்பர நிறுவனங்கள், தங்களின் விளம்பரத்தினை இவரது வீடியோக்களுக்கு இடையே ஒளிபரப்புவதற்கு மட்டும் இவருக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து வருகின்றார்கள்.

கடந்த மார்ச் மாதம், ட்விட்சில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோவர்களை பெற்றதன் மூலம் வெளி உலகிற்கு இவர் தெரிய வந்துள்ளார்.  பிரபலமான ராப் ஆர்ட்டிஸ் ட்ரேக்கிற்கு எதிராக ஃபோர்ட்நைட்டில் இவர் விளையாடியதை லைவ் ஸ்டிரிமாக ஒளிபரப்ப, அதனை ஒரே நேரத்தில் 6,00,000 நபர்கள் பார்த்துள்ளனர்.

புகழ் பெற்ற ஈ.எஸ்.பி.என் விளையாட்டு பத்திரிக்கையின் முகப்பினை அலங்கரித்த முதல் ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர் இவர் ஆவார். ஐபோன், ஆண்ட்ராய்ட், மேக், ப்ளே ஸ்டேசன் 4, எக்ஸ்பாக்ஸ் ஒன், நிண்டெண்டோ ஸ்விட்ச், மற்றும் பி.சி. என ஏழு வித்தியசமான பிளாட்பார்ம்களில் இந்த கேமை விளையாடலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment