Fortnite Video Game : ஃபோர்ட்நைட் வீடியோ கேம் உலக அளவில் வீடியோ கேம் ப்ளையர்களின் மனம் கவர்ந்த மற்றொரு வீடியோ கேம் ஆகும். உலக அளவில் தற்போது இந்த வீடியோ கேமினை 200 மில்லியன் கேமர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
Advertisment
Fortnite Video Game - 200 மில்லியன் வீடியோ கேமர்கள்
ஜூன் மாதத்தில் வெறும் 78.3 மில்லியன் கேமர்கள் மட்டுமே இந்த கேமினை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். தற்போது 60% அளவில் அந்த கேமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இந்த கேம் அறிமுகம் ஆன போது இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. தற்போது இந்த ஃபோர்ட்நைட் கேம் விண்டோஸ், மேக் ஓ.எஸ். நிண்டெண்டோ ஸ்விட்ச், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் டிவைஸ்களில் இலவசமாக விளையாடலாம்.
200 மில்லியன் கேமர்களும் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று கூற இயலாது. ஆனால் மற்ற கேம்களைக் காட்டிலும் இதனை கேமர்கள் அதிகமாக தேர்வு செய்து விளையாடி வருகிறார்கள். ப்ளூம்பெர்க் என்ற இதழ் வெளியிட்டிருக்கும் அறிக்கைப் படி 125 மில்லியன் பயனாளிகளை 5 மாத இடைவெளியில் பெற்றிருக்கிறது ஃபோர்ட்நைட்.
பி.எஸ்.4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் -ல் விளையாடுவதற்கு பயனாளிகள் PSN Plus, Xbox Live subscription என இரண்டையும் ஆக்டிவ் செய்திருக்க வேண்டும். சேவ் த வேர்ல்ட் (Save the world) மோடில் நான்கு நபர்கள் ஒன்றாக இணைந்து விளையாட இயலும். ஃபோர்ட்நைட் பேட்டில் ராயல் என்ற விளையாட்டும் மிக்க சுவாரசியம் கொண்டதாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news