ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட்டுக்கு ரூ.0 செலவு: ஜெமினி ஏ.ஐ-யின் அட்டகாசமான 5 ப்ராம்ப்ட் இங்கே!

ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களுக்காக லட்சக்கணக்கில் செலவழிப்பதைத் தவிர்க்கலாம். கூகுளின் ஜெமினி ஏ.ஐயில் 'Nano Banana' அம்சத்தைப் பயன்படுத்தி, கற்பனைக்கு ஏற்றவாறு ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை இலவசமாக உருவாக்கலாம்.

ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களுக்காக லட்சக்கணக்கில் செலவழிப்பதைத் தவிர்க்கலாம். கூகுளின் ஜெமினி ஏ.ஐயில் 'Nano Banana' அம்சத்தைப் பயன்படுத்தி, கற்பனைக்கு ஏற்றவாறு ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை இலவசமாக உருவாக்கலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
pre-wedding ai photos

ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட்டுக்கு ரூ.0 செலவு: ஜெமினி ஏ.ஐ-யின் அட்டகாசமான 5 ப்ராம்ப்ட் இங்கே!

திருமணத்திற்கு முந்தைய (Pre-Wedding) புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் செலவழிப்பது ஏன்? ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மூலம் அதை இலவசமாகச் செய்யலாமே! கூகுளின் ஜெமினி ஏ.ஐ. கருவியானது, 'Nano Banana' அம்சத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கும் புதிய ஜோடி டிரெண்ட் (Trend) தற்போது உருவாக்கியுள்ளது.

Advertisment

உண்மையான ஸ்டுடியோக்கள், போஸ்கள் மற்றும் அதிகப் பணச் செலவுக்கு பதிலாக, மக்கள் இப்போது ஜெமினியின் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் கற்பனைக்கு ஏற்றவாறு ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். ஜெமினி ஏ.ஐ. ஆப் (App) மற்றும் சரியான ப்ராம்ப்ட் (Prompts) கொடுத்து, ஒரு ஜோடியின் பயணத்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களாக மாற்றலாம். கூகுள் ஜெமினியின் 'Nano Banana' அம்சம் தொடங்கப்பட்டதிலிருந்து 5 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்களை உருவாக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இது பெரிய எண்ணிக்கையாகும்.

ஏ.ஐ. மூலம் சிறந்த ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை உருவாக்க 5 ப்ராம்ப்ட்ஸ்(Prompts):

ஜெமினி ஏ.ஐ-யைப் பயன்படுத்தி, உங்க கனவு போன்ற திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய 5 படைப்புத் திறன் கொண்ட (Creative) ப்ராம்ப்ட்ஸ்.

Advertisment
Advertisements

1. உதய்பூர் ஏரி மற்றும் படகில் பொன்னிற ஒளியின் பிரதிபலிப்புடன் கூடிய ரொமான்டிக் காட்சி

Create a 4K HD romantic pre-wedding scene on the serene lakes of Udaipur. The couple sits in a traditional wooden boat, surrounded by calm water and palace reflections. Golden hour light adds warmth, emphasising intimacy and elegance.

2. தாஜ்மஹால் பின்னணியில் பாரம்பரிய உடையில் சினிமா பாணியில் புகைப்படம்

Create a 4K HD realistic pre-wedding photoshoot for an Indian couple, posing in front of the Taj Mahal at sunset, in a dreamy cinematic style. Both in traditional attire. The bride in a red lehenga with gold embroidery and the groom in a sherwani. Warm sunset lighting highlights the monument’s grandeur, while flower petals scatter across the courtyard.

3. மூணாறு தேயிலைத் தோட்டத்தில் மென்மையான நிற ஆடைகள், இயற்கையான மூடுபனியுடன் கூடிய ரொமான்டிக் காட்சி

Create a 4K HD pre-wedding photoshoot for a couple in Munnar’s tea leaf plantations, clad in pastel tones and morning fog. Place them in the middle of the lush green plantation, surrounded by mist-covered hills and soft sunlight peeking through the fog. The couple should be holding hands, looking at each other lovingly, with flowing outfits. Use a cinematic tone with a dreamy, romantic atmosphere, soft focus background, and natural lighting.

4. வயல்வெளியில் அமைதியான மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்ளும் ஜோடி

A couple embraces during the golden hour in a vast, open field. Bathed in the warm, soft light of the setting sun, their elegant outfits contrast beautifully with the natural, rustic landscape. The image should capture a timeless, romantic moment, full of genuine affection and peaceful joy.

5. கடற்கரையோரம் கைகோர்த்து நடந்து, இயல்பாகச் சிரிக்கும் ஜோடி

Create a realistic pre-wedding photoshoot for an Indian couple. Romantic beachside, pastel outfits, golden hour lighting, candid laughter. They are walking along the beach, holding hands.

ஜெமினி ஏ.ஐ. மூலம் விண்டேஜ் 90-களின் பாலிவுட் புகைப்படங்கள், நவராத்திரி லுக்ஸ் (Navratri looks), கர்பா இரவு லுக்ஸ் போன்ற புகைப்படங்களை உருவாக்குவதுடன் இந்த ஏ.ஐ. ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் டிரெண்டும் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: