Tech Tamil News: கடந்த சில ஆண்டுகளில், மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டி.வி போன்றவற்றில் அதிக உள்ளடக்கத்தைப் பார்ப்பதனால் பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோவிட் -19 தொற்றுநோயினால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், கடந்த ஆறு மாதங்களில் OTT உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே திரைப்படங்கள், சீரிஸ்களை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இருப்பினும், எல்லோராலும் மல்டிபிள் சந்தாக்களில் பணத்தைச் செலுத்த முடியாது. ஒருசிலரோ, அவர்கள் செலுத்தும் பணத்திற்குச் சந்தா மதிப்புள்ளதாக இருக்கிறதா என்பதை முயற்சி செய்து பார்க்கிறார்கள். இவ்விரண்டு வகையில் நீங்கள் ஒருவராக இருந்தால், பின்வரும் ஸ்ட்ரீமிங் சேவைகளில் இலவச சோதனை அல்லது இலவச உள்ளடக்கத்தை எவ்வாறு பெறுவது என்பதற்கான வழிகாட்டி உள்ளது.
நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸில் தற்போது இலவச சோதனை எதுவும் இல்லை. என்றாலும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு சில உள்ளடக்கங்களை நீங்கள் இலவசமாகப் பெறலாம். கலிஃபோர்னிய ஸ்ட்ரீமிங் தளம் வழங்கும் இலவச உள்ளடக்கத்தைக் காண, https://www.netflix.com/in/watch-free - இந்த இணைப்பை உங்கள் வெப் பிரவுசரில் டைப் செய்து பயன்படுத்தலாம். இந்த ஆப்ஷன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்புகளில் மட்டுமே கிடைக்கும். இதனை iOS சாதனங்களில் (ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள்) பயன்படுத்த முடியாது. பயனர்கள் இதனை ஸ்மார்ட் டிவிகளில் கூட பயன்படுத்தலாம் ஆனால், இந்த உள்ளடக்கத்தைப் பார்க்க ஸ்மார்ட் டிவியில் இருக்கும் பிரவுசரில் அதன் வெப்சைட் லிங்க்கை உள்ளிட வேண்டும்.
அமேசான் பிரைம் வீடியோ
அமேசான் பிரைம் வீடியோ 30 நாட்களுக்கு இலவச சோதனையை வழங்குகிறது. நீங்கள் அதை டெஸ்க்டாப்பில் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மேல் இடது மூலையில் உள்ள மூன்று வரிகளை கிளிக் செய்து, கீழே ஸ்க்ரோல் செய்து, உங்கள் கணக்கைத் தொடர்ந்து வரும் 'உதவி' பட்டனை கிளிக் செய்யவும். பிறகு ‘உறுப்பினர் மற்றும் சந்தாக்கள்' ஆப்ஷனுக்கு கீழ் உள்ள 'ஃப்ரீ டைம் அன்லிமிடெட்' ஆப்ஷனை க்ளிக் செய்யவும். உங்களுக்கு விருப்பமான திட்டத்தைத் தேர்வு செய்து, கட்டண விவரங்களை நிரப்பிவிட்டு, உங்கள் 30 நாள் இலவச சோதனையைத் தொடங்கலாம். 30 நாட்களுக்குள் இதிலிருந்து விலக வேண்டும். இல்லையெனில் நீங்கள் உள்ளிட்ட கார்டிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும்.
ஜீ5
தற்போது, ஜீ5 இலவச சோதனை எதுவும் இல்லை. என்றாலும், நீங்கள் ஜீ5 வலைத்தளம் அல்லது செயலியில் பிரீமியம் அல்லாத இலவச உள்ளடக்கத்தைப் பெற முடியும். இதன் சந்தா ஒரு மாதத்திற்கு ரூ.99-ல் தொடங்கி வருடத்திற்கு ரூ.999 வரை நீள்கிறது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார்
டிஸ்னி + ஹாட்ஸ்டார் தற்போதைக்கு இலவச சோதனையை வழங்கவில்லை. ஆனால், இடையில் நிறைய விளம்பரங்களோடு பல உள்ளடக்கங்களை இலவசமாகப் பார்க்கலாம். டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் மாத சந்தா ரூ.299-லிருந்து வருட சந்தா ரூ.1,499 வரை பெறலாம். ஒரு வருடத்திற்கான ரூ.365 செலுத்தி, ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் பெற்றுக்கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"