ஆதார் கார்டு டூ யு.பி.ஐ. வரை 1,500+ சேவைகள்... போனில் கட்டாயம் இருக்க வேண்டிய இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்!

இந்திய அரசு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பல இலவச டிஜிட்டல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட 12 இலவச ஆஃப்கள் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், பல அரசு சேவைகளை ஸ்மார்ட்போனிலேயே பெறலாம்.

இந்திய அரசு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பல இலவச டிஜிட்டல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட 12 இலவச ஆஃப்கள் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், பல அரசு சேவைகளை ஸ்மார்ட்போனிலேயே பெறலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Government Apps

ஆதார் கார்டு டூ யு.பி.ஐ., 1,500+ சேவைகள்... போனில் கட்டாயம் இருக்க வேண்டிய இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்!

இன்றைய காலகட்டத்தில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவோ அல்லது அதிக காகித வேலைகளில் ஈடுபடவோ விரும்புவதில்லை. அதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு குடிமக்களின் சேவைகளை எளிமையாக்க பல டிஜிட்டல் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவைகள் முற்றிலும் இலவசம். உங்கள் நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்த உதவும் 12 முக்கிய அரசு ஆஃப்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. UMANG (Unified Mobile Application for New-age Governance)

Advertisment

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் செயலி. பிஎஃப் (PF) கோரிக்கைகளைத் தாக்கல் செய்வது முதல் மின்சார கட்டணத்தைச் சரிபார்ப்பது வரை பல சேவைகளை இதில் பெறலாம்.

2. AIS for Taxpayers (வருமான வரி செலுத்துவோருக்கான செயலி)

இந்திய வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட இந்த செயலி, வருமான வரி செலுத்துவோரின் ஆண்டுத் தகவல் அறிக்கையை (Annual Information Statement - AIS) முழுமையாகக் காட்டுகிறது. இதில் உள்ள தகவல்கள் குறித்து வரி செலுத்துவோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

3. DigiLocker (டிஜிலாக்கர்)

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய முயற்சியான இது, குடிமக்கள் தங்கள் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாகச் சேமித்து அணுக உதவுகிறது. ஆதார், பான், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை அசல் நகல்கள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.

4. DigiYatra (டிஜியாத்ரா)

Advertisment
Advertisements

விமான நிலையங்களில் விரைவான சோதனைக்காக முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் செயலி இது. தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இது செயல்பட்டு வருகிறது.

5. RBI Retail Direct (ஆர்பிஐ ரீடெயில் டைரக்ட்)

புரோக்கர் இல்லாமல் நேரடியாக அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய இந்த செயலி உதவுகிறது. இது பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் முற்றிலும் ஆன்லைன் சேவையை வழங்குகிறது.

6. Postinfo (போஸ்ட்இன்ஃபோ)

இந்தியா போஸ்ட்-ன் செயலியான இதன் மூலம், ஸ்பீடு போஸ்ட்-ஐக் கண்காணிக்கவும், தபால் கட்டணங்களைச் சரிபார்க்கவும், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களைக் கண்டறியவும் முடியும்.

7. SWAYAM (சுயம்)

பள்ளி மற்றும் உயர்கல்விக்கான இலவச ஆன்லைன் படிப்புகளை, ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறலாம்.

8. 112 India 

காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு அவசரகால எச்சரிக்கைகளை உடனடியாக அனுப்ப உதவும் ஒற்றை ஆஃப் இது.

9. BHIM UPI (பீம் யுபிஐ)

அரசு ஆதரவுடன் செயல்படும் இந்த யுபிஐ செயலி, பணமில்லா பரிவர்த்தனைகளை எப்போது வேண்டுமானாலும், எங்கும் எளிதாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய உதவுகிறது.

10. NextGen mParivahan (நெக்ஸ்ட்ஜென் எம் பரிவாகன்)

உங்கள் வாகனப்பதிவு சான்றிதழ் (RC), ஓட்டுநர் உரிமம் (DL) ஆகியவற்றின் டிஜிட்டல் நகல்களைப் பயன்படுத்தவும், சலான்களை சரிபார்க்கவும், வாகன உரிமையை உறுதிப்படுத்தவும் இது உதவுகிறது.

11. DIKSHA (தீக்‌ஷா)

பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாடத்திட்டத்துடன் கூடிய தரமான கல்வி உள்ளடக்கத்தை வழங்கும் ஓர் மின்-கற்றல் செயலி.

12. Jan Aushadhi Sugam (ஜன் அவுஷதி சுகம்)

மலிவு விலையிலான பொதுவான மருந்துகளைக் கண்டறியவும், அருகிலுள்ள ஜன் அவுஷதி கேந்திரா மையங்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும் இந்த செயலி உதவுகிறது.

இந்த 12 செயலிகள் மூலம், பொதுமக்கள் நீண்ட வரிசையைத் தவிர்த்து, காகித வேலைகளைக் குறைத்து, தங்கள் ஸ்மார்ட்போன்கள் வழியாகவே அரசு சேவைகளை எளிதாகப் பெறலாம்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: