scorecardresearch

ஆப்பிள் முதல் கார்மின் வரை: பெண்களுக்கு அழகு சேர்க்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்

பெண்களுக்கான சிறந்த பிராண்டெட் ஸ்மார்ட்வாட்ச்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஆப்பிள் முதல் கார்மின் வரை: பெண்களுக்கு அழகு சேர்க்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்

பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள கூடுதல் நேரம் செலவிடுவர். நேர்தியாக உடை அணிவது, அதற்கு ஏற்ற வகையில் கம்மல் அணிவது முதல் செப்பல் வரை மேட்சிங்காக அணிவர். இதில் முக்கிய பங்கு வகிப்பது கைக் கடிகாரம். அதாவது வாட்ச். தற்போது ஸ்மார்ட்வாட்ச்கள் டிரெண்டிங்கில் இருக்கிறது. ஜீன்ஸ், புடவை, லெக்கின்ஸ் என எது அணிந்தாலும் ஸ்மார்ட்வாட்ச்கள் பொருத்தமாகவும் டிரெண்டாகவும் இருக்கிறது.

அந்த வகையில் இந்த மகளிர் தினத்தில் உங்கள் அம்மா, தோழி, மனைவி என அவர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் பரிசளித்து மகிழுங்கள்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8

செப்டம்பர் 2022- இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 பல அம்சங்களுடன் வருகிறது. இது வாட்ச் ஓஎஸ் 9 மூலம் இயங்குகிறது. துல்லியமான சென்சார் தகவல்கள், ஃபிட்னஸ் அம்சங்களை கொண்டுள்ளது.
நம்மைச் சார்ந்த சுகாதாரத் தரவுகள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. வாட்ச் சீரிஸ் 8 கிராஸ் டிடெக்கஸனுடன் வருகிறது. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு நிறங்களில் வருகிறது. சிக் ஸ்ராப்புடன் அன்றாட பயன்பாடுகளுக்கு சரியான தேர்வாகும்.

கார்மின் SQ 2 (Garmin Venue SQ 2)

கார்மின் வாட்ச்களும் சிறந்த பிராண்டெட் வாட்ச்களில் ஒன்றாக உள்ளது. கார்மின் வாட்ச்கள் பிளாக் ஸ்லேட், பிரெஞ்ச் கிரே மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. Garmin Venue SQ 2 35.9 மிமீ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 24×7 ஹெல்த் டிராக்கிங்கில் பல்ஸ் OX, ஃப்ட்னஸ், பெண்கள் ஹெல்த் டிராக்கிங், மன அழுத்த கண்காணிப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. இது தவிர ஏரோபிக்ஸ்,
யோகா, நீச்சல், எடைப் பயிற்சி போன்ற வசதிகளையும் உள்ளிடப்பட்டுள்ளன. 1 முறை சார்ஜ் செய்தால் 11 நாட்கள் வரை பயன்படுத்த முடியும். மேலும், பயனர்கள் Spotify மற்றும் Amazon-இலிருந்து பாடல்களை எளிதாக டவுன்லோடு செய்து பயணங்களின் போது இசையை ரசிக்கலாம்.

Fossil Gen 5E Smartwatch

Fossil Gen 5E Smartwatch ஸ்மார்ட்வாட்ச் 1.2-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் Wear OS by Google, பில்டின் ஸ்பீக்கர் மற்றும் பல ஆரோக்கிய அம்சங்களுடன் வருகிறது. முக்கியமாக இந்த வாட்ச்சை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு உடன் எளிதாக பயன்படுத்த முடியும். ஃபிட்னஸ், ஸ்போட்ஸ் மோட் உள்பட பல வசதிகள் இதில் உள்ளன. அதேபோல் பயணங்களின் போது பயனர்கள் இசையை ரசிக்கலாம்.

டைட்டன் ஸ்மார்ட்வாட்ச்

நியூ டைட்டன் ஸ்மார்ட்வாட்ச் இளஞ்சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் வருகிறது. இது 45mm AMOLED டிஸ்ப்ளே மற்றும் 14 நாட்கள் சார்ஜ் வழங்கும் பேட்டரியைக் கொண்டுள்ளது. சாதனம் உடல் வெப்பநிலை மானிட்டர் மற்றும் ஃபிட்னஸ் வசதிகளை வழங்குகிறது. ஜிபிஎஸ் வசதி. 14 ஸ்போட்ஸ் மோட் வசதிகள் எனப் பல உள்ளன. இது தவிர SpO2 மானிட்டர், இதய துடிப்பு மானிட்டர் மற்றும் பீரியட் டிராக்கர் ஆகியவையும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: From apple to garmin 5 smartwatches for her