கிரிக்கெட், பிரபலங்கள் மற்றும் சமையல் பற்றிய கேள்விகள் 2024-ல் இந்திய பயனர்களால் அலெக்ஸாவிடம் அதிகம் கேட்கப்பட்டன. செவ்வாயன்று, அமேசான் தனது அலெக்ஸாவின் 2024 ஆம் ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி அறிக்கை வெளியிட்டது.
பெரும்பாலான பயனர்கள் வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை அறிய விரும்பினாலும், மற்றவர்கள் விராட் கோஹ்லி போன்ற பிரபலமான வீரர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தேடினார்கள்.
சில பயனர்கள் அலெக்ஸாவின் வழிகாட்டுதலின் கீழ் பட்டர் சிக்கன் தயாரிப்பதையும் கற்றுக்கொண்டனர். அலெக்ஸா பல பயனர்களின் ஆர்வத்திற்கு பதில் அளித்தது, “கிருதி சனோன் உயரம் எவ்வளவு ?” போன்ற கேள்விகளைக் கேட்டனர் மற்றும் "MrBeast-ன் நிகர மதிப்பு என்ன?" போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன.
இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவை ஹிங்கிலிஷ் மொழியில் இருந்தன. விளையாட்டு - முதன்மையாக கிரிக்கெட் - பிரபலங்கள் மற்றும் சமையல் தொடர்பான கேள்விகள் அலெக்சா பட்டியலில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளாகும்.
மேலும் பாடல்களைப் பொறுத்தவரையில் ஜமால் குடு, ஸ்ரீ ஹனுமான் சாலிசா, காயத்ரி மந்திரம் மற்றும் இல்லுமினாட்டி போன்ற பாடல்கள் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“