/indian-express-tamil/media/media_files/urgKBdMNL0wQCp57sYj3.jpg)
இஸ்ரோ தனது சி.இ-20 கிரையோஜெனிக் எஞ்சினின் மனித மதிப்பீட்டு சோதனையை நிறைவு செய்துள்ளதாக இன்று (பிப்.21) அறிவித்தது. இது மனிதர்களை விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லும் எல்.வி.எம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7-வது மற்றும் இறுதிச் சுற்று தரைத் தகுதிச் சோதனைகள் பிப்ரவரி 13 அன்று மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஏஜென்சியின் உந்துவிசை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கட்ட சோதனை செய்யப்பட்டன. அடிப்படைத் தகுதித் தேர்வுகள் life demonstration tests, endurance tests, and performance assessments ஆகிய சோதனை செய்யப்பட்டதாக இஸ்ரோ கூறியது.
இஸ்ரோவின் லட்சிய திட்டமான ககன்யான் திட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் குழு விண்வெளியில் 400 கிலோ மீட்டர் சுற்றுப் பாதைக்கு அனுப்பபட்டு இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திறனை நிரூபிக்கும். விஞ்ஞானிகள் 3 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு மேற்கொண்டு பின்னர் மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். விஞ்ஞானிகள் இருக்கும் விண்கலத்தை இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறக்கப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க:https://indianexpress.com/article/technology/science/isro-ce-20-cryogenic-engine-gaganyaan-mission-9172764/
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் சோதனை பயணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் டி.வி-டி1 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது மிஷனின் க்ரூ எஸ்பேஸ் சிஸ்டத்தை சோதனை செய்ய அனுப்பபட்டது. இது மிக முக்கிய சோதனையாகும். பயணத்தின் போது வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் ராக்கெட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற இந்த வசதி பயன்படும் என இஸ்ரோ தெரிவித்தது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.