இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ககன்யான் திட்டத்தின் குழு தொகுதி (crew module) கடலில் தரையிறங்கும் போது அது நிமிர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய குழு தொகுதியில் அடுத்த ஆண்டு சோதனை செய்ய உள்ளது.
இஸ்ரோ ககன்யான் திட்டத்தின் மூலம் முதல் முறையாக மனிதர்களை விண்வெளி அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2024-25-ல் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம்
இஸ்ரோ டிவி-டி1 சோதனை செய்தது. க்ரூ- எஸ்கேப் சிஸ்டத்தின் சோதனையை வெற்றிகரமாக செய்ததாக மையம் அறிவித்தது.
இந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, சோதனை செய்யப்பட்டது. வங்காள விரிகுடாவில் தரையிறக்கப்பட்ட விண்கலத்தை கடற்படை வீரர்கள் மீட்டனர். அப்போது டிவி-டி1 மிஷனில் இருந்த அடிப்படை குழு தொகுதி தலைகீழான நிலையில் (upside down) மீட்கப்பட்டது, இந்நிலையில் விண்வெளி வீரர்கள் இருக்கும் குழு தொகுதி நிமிர்ந்த நிலையில் இருக்க வைப்பதற்கான முக்கிய சோதனை அடுத்தாண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.
டிவி-டி2 சோதனையில் பல்வேறு அமைப்பு சோதனைகளுடன் இந்த சோதனையும் மேற்கொள்ளப்படும் என டி1 மிஷன் இயக்குனர் எஸ். சிவக்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 2 நிலையான நிலைகள் உள்ளன. ஒன்று upright மற்றொன்று upside down ஆகும். ககன்யான் திட்டத்தில் , வீரர்கள் இருக்கும் உண்மையான குழு தொகுதியில் upside down நிலையைத் தவிர்க்க, அப்ரைட்டிங் சிஸ்டம் சோதனை வரும் நாட்களில் மேற்கெள்ளப்படும். கார்களில் ஏர்பேக்குகள் உள்ளது போல் இந்த அமைப்பு வாயு நிறைந்த பலூன்கள் போல் இருக்கும் என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/to-keep-gaganyaan-crew-module-upright-after-splashdown-isro-plans-tests-in-2024-9024211/
"குழுவின் தொகுதி கவிழ்ந்தால், பலூன் அமைப்பு நேர் நிலையை மீட்டெடுக்கும். இந்த குறிப்பிட்ட குழு தொகுதியில், அது நிலையானதாக இருக்க முடியுமா என்று பார்க்க விரும்பினோம். டி1 சோதகடல் அலைகள் காரணமாக பக்கவாட்டு காற்று மற்றும் இடையூறு ஏற்படும் போது அது நிலையற்றதாக மாறும், அதனால் அது ஒரு தலைகீழான நிலைக்கு அருகில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்," என்று அவர் கூறினார்.
"அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அடுத்த சோதனை வாகன பணியை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய க்ரூ மாட்யூல், க்ரூ சீட் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டம், நிமிர்ந்து நிற்கும் சிஸ்டம் போன்றவற்றை சோதனை செய்ய உள்ளோம். மேலும் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தில், டி1 போலல்லாமல் குறைந்த மற்றும் உயரமான எஸ்கேப் மோட்டார்கள் இரண்டையும் பயன்படுத்துவோம். ,” என்று சிவக்குமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.