இந்தியா சார்பில் விண்வெளிக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக (ககன்யான்) தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேருக்கு, ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியா, விரைவில் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, இந்திய விண்வெளி கட்டுப்பாட்டு அமைப்பான இஸ்ரோவின் ஹியூமன் ஸ்பேஸ்பிளைட் மையம், ரஷ்யாவின் காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிற்சி, பிப்ரவரி 10ம் தேதி முதல் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, காகரின் விண்வெளி பயிற்சி மையத்தின் தலைவர் பவேல் விலசோவ் தெரிவித்துள்ளதாவது, விமானப்படை வீரர்கள், விமானங்கள் மட்டுமல்லாது பறக்கும் விதத்தினால நுட்பங்களை தெளிவாக அறிந்துள்ள நிலையில், விண்வெளி தொழில்நுட்பமும் அவர்கள் எளிதாக கற்கும் வகையிலானதாகவே இருக்கும்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, விண்வெளி ஆய்வுகளில் இந்தியா எப்போதுமே மற்ற நாடுகளுக்கு தொடர்ந்து முன்னோடியாக உள்ளது. விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயம் உள்ளது. எங்களது மையத்தில் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் எவ்வாறு பயிற்சி பெறுகின்றனர் என்பதை அறிய தாங்கள் அறிய உள்ளீர்கள்.
ஒரு வருடம் கால அளவு கொண்டவகையிலான இந்த பயிற்சி முகாமில், இந்திய விமானப்படை வீரர்களுக்கு வழக்கமான உடற்பயிற்சிகள் மட்டுமல்லாது பயோ மெடிக்கல் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அவர்கள் சோயுஸ் விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட உள்ளனர்.
இந்திய வீரர்களுக்கு, special Il-76MDK ரக விமானத்தில், குறுகிய கால எடையில்லா நிலையை அடைவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாது, விண்வெளி ஓடத்தில், எத்தகைய நிலையிலும் தரையிறங்கும் வசதியிலான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 இந்திய விமானப்படை வீரர்களும், விண்வெளியில் 526 நாட்கள் தங்கியிருந்து உலக சாதனை படைத்துள்ள ஓலெக் வலேரியாவிச் கொடொவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கொடோவ், சமீபத்தில், பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படையின் ஏரோஸ்பேஸ் மெடிசின் மையத்திற்கு விஜயம் செய்தார். அங்கு அவர் நடத்திய பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயணம் குறித்த முழுமையான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒருபகுதியாக, விண்வெளி வீரர்கள் குழு, அவர்களுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் மும்முரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.