2021ல் விண்வெளி செல்லும் இந்தியர்கள்... தீவிர ஆராய்ச்சியில் இஸ்ரோ...

வணிக ரீதியாக இந்தியாவில் இருந்து 31 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்

Gaganyaan Mission : பி.எஸ்.எல்.வி.சி – 43 ராக்கெட் உதவியுடன், பூமியை கண்காணிக்கும் எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ் செயற்கைக் கோள், நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 30 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய நாடு இந்தியா என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த இஸ்ரோ தலைவர் கே.சிவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

ISRO PSLV-C43 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

அப்போது வணிக ரீதியாக இந்தியாவில் இருந்து 31 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பின்னர், நேற்று விண்ணில் ஏவப்பட்ட எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். செயற்கைகோள் சண்டிகரில் உள்ள ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்டது என்று கூறினார். ஒரே ராக்கெட்டில் பெரியதும் சிறியதுமாக, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 31 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

விண்வெளித் துறையில் மகத்தான சாதனைகளைப் புரிந்த இந்தியா

நேற்று விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள் விவசாய மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இது 20 உலக நாடுகள் மட்டுமே செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பியுள்ளது. 270 செயற்கைக் கோள்களில் 30 செயற்கைக் கோள்கள் இந்தியாவில் இருந்து அனுப்பட்டடது.

விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ – Gaganyaan Mission

ககன்யான் என்ற திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக இஸ்ரோ தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 2020ம் ஆண்டு டிசம்பர் ஆளில்லா விண்கலம் ஒன்றை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது இந்தியா. 2021ம் ஆண்டு, ஜூலை மாதம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மனிதர்கள் செல்லும் விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளதாக இருக்கிறது இஸ்ரோ என்று அவர் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close