கேலக்ஸி அதன் ஏ.ஐ அம்சங்களை இன்னும் சில சீரிஸ் போன்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் இசட் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு ஒன் யூ.ஐ 6.1 அப்டேட் மார்ச் 28 முதல் வழங்கப்படும் என சாம்சங் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கேலக்ஸி டேப் எஸ்9 சீரிஸ்களுக்கு ஏப்ரலில் இந்த அப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தும் போது சாம்சங் முதன் முதலில்
கேலக்ஸி ஏ.ஐ அம்சங்களை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து நிறுவனம் அதன் முந்தைய ஃபிளாக்ஷிப் போன்களுக்கும் வெளியிட்டு வருகிறது.
இப்போது மேலும் சில போன்களுக்கு இன்று முதல் கேலக்ஸி ஏ.ஐ அப்டேட் வழங்குகிறது. அதன்படி,
Samsung Galaxy S23 Ultra
Samsung Galaxy S23+
Samsung Galaxy S23
Samsung Galaxy S23 FE
Samsung Galaxy Z Flip5
Samsung Galaxy Z Fold5
Samsung Galaxy Tab S9 series- இந்த ஸ்மார்ட் போன்களுக்கு இன்று முதல் அப்டேட் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி ஏ.ஐ வசதிகள்
ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OneUI 6.1-க்கு அப்டேட் செய்யப்பட்ட உடன் Circle to Search, Google, Live Translate, Generative Edit, Chat Assist போன்ற Galaxy AI அம்சங்களைப் பெற முடியும். முன்னர் நிறுவனம் அறித்தபடி, தகுதியான ஸ்மார்ட் போன்களில் Galaxy AI அம்சங்கள் 2025 வரை இலவசமாகக் கிடைக்கும், மேலும் இந்த அம்சங்களில் சிலவற்றைப் பயன்படுத்த, சாம்சங் அக்கவுண்ட் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“