கேமரா, பேட்டரி, டிஸ்பிளே மூனும் வேற லெவல்... ரூ.55,000 பட்ஜெட்டில் ஃபிளாக்ஷிப் சவால் விடும் எஸ்25 எஃப்.இ!

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி S25 FE சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது, சாம்சங்கின் பெரிய ஃபிளாக்ஷிப் ஃபோன்களில் இருக்கும் தரமான அம்சங்கள் இதிலும் இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி S25 FE சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது, சாம்சங்கின் பெரிய ஃபிளாக்ஷிப் ஃபோன்களில் இருக்கும் தரமான அம்சங்கள் இதிலும் இருக்கிறது.

author-image
Meenakshi Sundaram S
New Update
samsung s25 fe

கேமரா, பேட்டரி, டிஸ்பிளே மூனும் வேற லெவல்... ரூ.55,000 பட்ஜெட்டில் ஃபிளாக்ஷிப் சவால் விடும் எஸ்25 FE!

சாம்சங் கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்றாலே, அது ப்ரீமியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உச்சம். அந்த பிரம்மாண்டத்தை அதிக விலை கொடுக்கத் தயங்கும் ரசிகர்களுக்காகவே சாம்சங் கொண்டு வந்திருப்பதுதான் "ஃபேன் எடிஷன்" (Fan Edition - FE) போன்கள். அந்த வரிசையில், ஃபிளாக்ஷிப் அனுபவத்தை மலிவான விலையில் வழங்க, சாம்சங் கேலக்ஸி S25 FE மாடல் களமிறங்கியுள்ளது. செப்டம்பரில் அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போன், விலை காரணமாக S25 ஃபிளாக்ஷிப் மாடலைத் தவறவிட்டவர்களுக்கு, அதே தரமான அம்சங்களை, புதிய சலுகைகளுடன் வழங்குகிறது. 

Advertisment

சாம்சங் S25 FE: ப்ரீமியம் அம்சங்கள் 

6.7 இன்ச் டைனமிக் அல்மோல்ட் 2X டிஸ்ப்ளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட்). ஸ்க்ரோலிங் முதல் சினிமா பார்ப்பது வரை எல்லாமே வெண்ணெய் போல மென்மையாக, துல்லியமான காட்சிகளைக் கொடுக்கும். சாம்சங்கின் சொந்த Exynos 2400 பிராசஸர் (4nm). ஹெவி கேமிங், ஏ.ஐ. அம்சங்கள் என எல்லாவற்றையும் அதிக வெப்பம் இல்லாமல், மின்காந்த வேகம் போல் இயக்கும்.

பின்னால் ட்ரிபிள் கேமரா (50MP + 12MP + 8MP 3x ஆப்டிகல் ஜூம்). நீங்க எடுக்கும் ஒவ்வொரு போட்டோவும், ப்ரொஃபஷனல் படத்தைப் போலவே துல்லியமாக இருக்கும். இரவு நேரப் புகைப்படங்கள் (Nightography) இதில் தனி சிறப்பு என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான 4,900 mAh பேட்டரி. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கிறது. அவசரம் என்றால், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் நொடியில் சார்ஜ் ஏற்றிவிடலாம். ஐ.பி.68 (நீர் மற்றும் தூசி எதிர்ப்பு) பாதுகாப்புடன் கொரில்லா கிளாஸ் Victus+, Armor Aluminum ஃபிரேம் இருப்பதால், உங்க கைகளில் இரும்புக் கவசம் போல உணர்வீர்கள்.

8GB RAM உடன் 128GB, 256GB (அ) 512GB சேமிப்பகத்தில் கிடைக்கிறது. கேலக்ஸி S25 FE மாடல், அதன் விலை மூலம் S25 சீரிஸ் ஃபோன்களுக்கும் மிட்-ரேஞ்ச் போன்களுக்கும் இடையே வலுவான பாலமாகச் செயல்படுகிறது. 8GB RAM + 128GB வேரியண்ட் இந்தியாவில் ரூ.54,000 முதல் ரூ.58,000 வரை கிடைக்கிறது. 8GB RAM + 256GB வேரியண்ட் ரூ.59,000 முதல் ரூ.63,000 வரை கிடைக்கிறது. 

Advertisment
Advertisements

நீங்க அதிகப் பணம் செலவழிக்காமல், ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் (பவர்ஃபுல் பிராசஸர், AMOLED திரை, தரமான கேமரா) ஒரே போனில் பெற விரும்பினால், இந்த சாம்சங் கேலக்ஸி S25 FE சந்தேகமே இல்லாமல் உங்களுக்கான 'ஃபேன் எடிஷன்' ஆகும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: