scorecardresearch

Garena Free Fire உள்பட 54 சீன செயலிகளுக்கு தடை… முழு பட்டியல் இதோ!

சுவாரஸ்யம் என்னவென்றால், Garena Free Fire கேம் சீங்கப்பூரை தளமாகக் கொண்டது. அதன் டெவலப்பர் சீனாவை சேர்ந்தவர் அல்ல.

மத்திய உள்துறை அமைச்சகம், மொபைல் கேம்களில் மிகவும் பிரபலமான கரேனா ஃப்ரீ ஃபயர் கேம் உட்பட 54 சீன மொபைல் செயலிகளை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், Garena Free Fire கேம் சீங்கப்பூரை தளமாகக் கொண்டது. அதன் தயாரிப்பாளர் சீனாவை சேர்ந்தவர் அல்ல.

Garena Free Fire கடந்தாண்டு இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம்களில் ஒன்றாகும். குறிப்பாக, கடந்த 2020 செப்டம்பர் மாதம் பப்ஜி கேம்-க்கு மத்திய அரசு தடை விதித்தை தொடர்ந்து, இந்த கேமின் பதிவிறக்கம் சூடுபிடித்தது. இந்த Free Fire கேம் ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

2020இல், சீனா செயலிகளான டிக்டாக் உட்பட பல ஷாட் வீடியோ செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. PTI அறிவிப்பின்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் இந்த செயலியின் பயன்பாட்டை தடை செய்யும் அறிவிப்பு முறையாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29, 2020 அன்று TikTok தடை செய்யப்பட்டபோது, பட்டியலில் மொத்தம் 59 செயலிகள் இருந்தன. அதிலிருந்ததில் ஷேரிட், ஷீன் சியோமி மி சமூகம், கிளாஷ் ஆஃப் கிங்ஸ், வெய்போ, லைக் போன்றவை முக்கியமான செயலிகள் ஆகும்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்த செயலிகளின் பயன்பாட்டை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் தடை செய்துள்ளது. அச்சட்டத்தின்படி, கணினி செயல்பாடு மூலம் எந்தவொரு தகவலையும் இடைமறிப்பது அல்லது கண்காணிப்பது அல்லது மறைகுறியாக்கம் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிடும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது.

இது பொதுவாக இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது தூண்டுதலைத் தடுப்பது போன்றவற்றின் நலன்களுக்காகச் செய்வது அவசியம் அல்லது உகந்தது என்று அரசாங்கம் திருப்தியடையும் போது மேற்கொள்ளப்படும்.

முன்னதாக, டிக்டாக் மற்றும் பப்ஜி செயலிகளுக்கு தடை விதித்தபோது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகியவை கருத்தில் கொண்டு தடை செய்யப்படுகின்றன என்று அரசாங்கம் கூறியுள்ளது.

செப்டம்பர் 2020இல் பப்ஜி கேம் உட்பட 117 செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. அதனை தொடர்ந்து, நவம்பர் 2020இல் 43 செயலிகளுக்கு தடை விதிக்கும் மூன்றாவது பட்டியல் வெளியானது. அந்த குறிப்பிட்ட பட்டியலில் AliExpress முக்கியமான செயலி ஆகும்.

தடை விதிக்கப்பட்ட 54 சீனப் செயலி முழுப் பட்டியல்

 1. பியூட்டி கேமரா: ஸ்வீட் செல்ஃபி எச்டி
 2. பியூட்டி கேமரா – செல்ஃபி கேமரா
 3. ஈக்வலைசர் – பாஸ் பூஸ்டர் & வால்யூம் ஈக்யூ & மெய்நிகராக்கி
 4. மியூசிக் பிளேயர்- Music.Mp3 பிளேயர்
 5. ஈக்வலைசர் & பாஸ் பூஸ்டர் – மியூசில் வால்யூம் ஈக்யூ
 6. மியூசிக் பிளஸ் – எம்பி3 பிளேயர்
 7. ஈக்வலைசர் புரோ – வால்யூம் பூஸ்டர் & பாஸ் பூஸ்டர்
 8. வீடியோ பிளேயர் மீடியா ஆல் பார்மட்
 9. மியூசிக் பிளேயர் – ஈக்வலைசர் & எம்பி3
 10. வால்யூம் பூஸ்டர் – லவுட் ஸ்பீக்கர் & சவுண்ட் பூஸ்டர்
 11. மியூசிக் பிளேயர் – எம்பி3 பிளேயர்
 12. சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்திற்கான கேம்கார்டு
 13. ஐசோலாண்ட் 2: ஆஷஸ் ஆஃப் டைம் லைட்
 14. ரைஸ் ஆஃப் கிங்டம்: லாஸ்ட் க்ரூசேட்
 15. APUS செக்யூரிட்டி HD (பேட் வெர்ஷன்)
 16. பேரலல் ஸ்பேஸ் லைட் 32 சப்போர்ட்
 17. விவா வீடியோ எடிட்டர்
 18. நைஸ் வீடியோ பைடு
 19. டென்சென்ட் Xriver
 20. ஒன்மியோஜி செஸ்
 21. ஒன்மியோஜி ஏரினா
 22. ஆப்லாக்
 23. டூயல் ஸ்பேஸ் லைட் – Multiple Accounts & Clone App
 24. டூயல் ஸ்பேஸ் ப்ரோ – Multiple Accounts & App Cloner
 25. டூயல் ஸ்பேஸ் லைட் – 32Bit சப்போட்
 26. டூயல் ஸ்பேஸ் – 32பிட் ஆதரவு
 27. டூயல் ஸ்பேஸ் – 64பிட் ஆதரவு
 28. டூயல் ஸ்பேஸ் ப்ரோ – 32Bit ஆதரவு
 29. கான்கர் ஆன்லைன்- MMORPG கேம்
 30. கான்கர் ஆன்லைன் 2
 31. லைவ் வேதர் & ரேடார் – அலர்ட்ஸ்
 32. நோட்ஸ்- கலர் நோட்பேட், நோட்புக்
 33. MP3 கட்டர் – ரிங்டோன் மேக்கர் & ஆடியோ கட்டர்
 34. வாய்ஸ் ரெக்கார்டர் & வாய்ஸ் சேஞ்சர்
 35. பார்கோடு ஸ்கேனர் – QR குறியீடு ஸ்கேன்
 36. லைகா கேம் – செல்ஃபி கேமரா
 37. EVE Echoes
 38. அஸ்ட்ராகிராஃப்ட்
 39. UU கேம் பூஸ்டர்-network solution for high ping
 40. Extraordinary Ones
 41. பேட்லேண்டர்ஸ்
 42. ஸ்டிக் Fight: The Game Mobile
 43. Twilight Pioneers
 44. CuteU: Match With The World
 45. Small World-Enjoy groupchat and video chat
 46. CuteU Pro
 47. 47 FancvU – Video Chat & Meetup
 48. ரியல்: கோ லைவ். Make Friends
 49. MoonChat: Enjoy Video Chats
 50. ரியல் லைட் -video to live!
 51. விங்க்: Connect Now
 52. FunChat Meet People Around You
 53. FancyU pro – Instant Meetup through Video chat!
 54. Garena Free Fire – Illuminate

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Garena free fire and 53 other chinese apps banned full list of banned apps