கூகுள் நிறுவனம் அதன் அட்வான்ஸ்டு ஏ.ஐ டூல்லான ஜெமினி ஏ.ஐ இப்போது கூகுள் ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஜெமினி பவர்ஃபுல் 1.5 ப்ரோ மாடல் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
ஜிமெயிலில் ஜெமினி ஏ.ஐ வசதிகள்
Email Summarisation and Response Suggestions
ஜிமெயிலில் வந்துள்ள பெரிய (நீண்ட) உரையாடல்களை ஜெமினி ஏ.ஐ சுருக்கி முக்கிய குறிப்புகளை உள்ளடக்கி சம்மரியாக வழங்குகிறது. அதோடு அதற்கான பதில்களை பரிந்துரைக்கிறது, பதில்களை வடிவமைப்பதில் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
Drafting Assistance
இ-மெயில்கள் டிராவ்ட் செய்வதற்கும், புதிய இ-மெயில்கள் எழுதுவதற்கும் ஜெமினி ஏ.ஐ உதவுகிறது.
professional and well-composed மெசேஜ்களை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதே போன்று
Information Retrieval என்ற வசதியையும் கொண்டுள்ளது. குறிப்பட்ட தகவல்களை இன்பாக்ஸ் அல்லது டிரைவ்-ல் இருந்து பெறலாம்.
ஜெமினி ஏ.ஐ எனெபிள் செய்வது எப்படி?
ஜெமினி ஏ.ஐ எனெபிள் செய்வதற்கு முன் பயனர்கள் அட்மின் கன்சோலில் ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் personalisation ஆப்ஷன் ஆன் ஆகி இருப்பதை உறுதி செய்யவும். அதன் பின் ஜிமெயில் வலப்புறத்தில் உள்ள “Ask Gemini” ஸ்டார் பட்டனை கொடுக்கவும்.
மொபைல் வெர்ஷனில் இ-இமெயில் த்ரெட்ஸ் பக்கத்தில் “summarise this email” என்ற ஆப்ஷன் கொடுத்து எனெபிள் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“