கூகுள் நிறுவனம் தனது சொந்த ஏ.ஐ வசதியில் புதிய அப்டேட் கொண்டு வர உள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது, பயனர் கேள்விகளுக்கு ரியல்-டைம் பதில்களை (real-time responses) வழங்கும் வகையில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட உள்ளது. சாட் ஜி.பி.டி-ல் உள்ளது போல் இந்த அம்சம் கொண்டு வரப்படுகிறது.
புதிய வசதி மூலம், பயனர்கள் பதிலைப் பார்க்க முடியும், அது உருவாக்கப்படுவதால், ஏற்றுவதற்கான முழுமையான பதிலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை, இது கேள்விகளின் வகையைப் பொறுத்து சிறிது நேரம் ஆகலாம்.
இதை செட்டிங்ஸ் அம்சம் சென்று எனெபிள் செய்ய வேண்டும். இதை செய்தால் கூகுளின் AI சாட்பாட்டிலிருந்து நிகழ் நேர பதில் கிடைக்கும். பதில்களை பெற காத்திருக்க வேண்டியதில்லை. பக்கம் வேகமாக லோடு செய்யப்பட்டு பதில் தரும். இது தற்போது படிப்படியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
கூகிள் ஜெமினி ஏ.ஐ-ஐ, ஐபோன் பயனர்களுக்காக அதன் பயன்பாட்டிற்குள் ஒருங்கிணைத்துள்ளது, மேலும் iOS க்கு இதே போன்ற அம்சம் வரும் நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“