ஜெமினிட் விண்கல் மழை இந்தாண்டு டிசம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை ஆக்டிவ் ஆக உள்ளன. எனினும் அதன் உச்சம் நாளை (டிசம்பர் 14) இரவு நடக்கிறது. "ரேடியன்ட் பாயிண்ட்" அடிவானத்திற்கு மேலே இருக்கும் போதெல்லாம் நீங்கள் ஜெமினிட் விண்கற்களை பார்க்க முடியும்.
டெல்லியில் இந்த நிகழ்வை நாளை (டிசம்பர் 14) வியாழன் இந்திய நேரப்படி மாலை 6.53 மணியளவில் வானில் பார்க்கலாம். அந்த நேரத்தில் அதன் கதிர்வீச்சு புள்ளிகள் கிழக்கு அடிவானத்திற்கு மேலே உயரும் என்று இன் தி ஸ்கை கூறுகிறது. இந்த நிகழ்வு மறுநாள் காலை 6.36 மணி வரை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.
ஜெமினிட்ஸ் விண்கல் மழையை எப்படி பார்ப்பது?
விண்கல் மழை நிகழ்வு உச்சத்தில் இருக்கும் போது வானத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 விண்கற்கள் வரை இருக்கலாம். ஜெமினிட் விண்கல் மழை, ஜெமினி விண்மீன் கூட்டத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது.
ஏனெனில் அங்குதான் விண்கல் மழை தோன்றியது. மற்ற பல வான நிகழ்வுகளைப் போலல்லாமல், விண்கல் மழையைப் பார்க்க உங்களுக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை.
விண்கல் பொழிவின் சிறந்த காட்சியைப் பெற, நகரத்தின் பிரகாசமான விளக்குகளிலிருந்து (bright lights) ஒதுங்கிய இடத்தைக் கண்டறியவும். நீங்கள் அதைச் செய்தவுடன், உங்களுக்குத் தேவையானது தெளிவான வானம் வேண்டும்.
நீங்கள் இருப்பிடத்தை அடைந்தவுடன், உங்கள் கண்களை சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு இருளில் சரிசெய்யவும். விண்கற்கள் பொழியும் ஜெமினி விண்மீனைக் கண்டறிய உங்கள் மொபைலில் இன்டர்ஆக்டிவ் ஸ்கை மேப் செயலி பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.
தி ஜெமினிட்ஸ் விண்கல் மழை
விண்கல் 3200 ஃபைட்டன் விட்டுச்சென்ற தூசி நிறைந்த பாதை வழியாக பூமி செல்லும்போது, விண்கல் விட்டுச்சென்ற சில விண்கற்கள் நமது கிரகத்தின் மேல் வளிமண்டலத்தில் எரிந்து, ஜெமினிட் விண்கல் மழையாக நமக்குத் தோன்றுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“