ஹைட்ரஜன் ட்ரெய்ன் : ஹைட்ரஜன் வாயுவால் இயங்கக்கூடிய முதல் ட்ரெய்னின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது ஜெர்மனி நாடு. டீசலால் இயங்கும் ட்ரெய்ன்களால் ஏற்படும் மாசுப்பாட்டினை கட்டுப்படுத்த இந்த தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ட்ரெய்ன் தயாரித்த ஃபிரான்ஸ் நிறுவனம்
பளீர் நீல வண்ணத்தில் இருக்கும் இந்த இரண்டு கொராடியா ஐலிண்ட் ட்ரெய்ன்களை உருவாக்கியிருக்கிறாது பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த அல்ஸ்டோம் என்ற நிறுவனம்.
வடக்கு ஜெர்மனியில் இருக்கும் ப்ரேமேர்ஹவன் (Bremerhaven ), ப்ரேமேர்வொயிர்டே (Bremervoerde) மற்றும் பக்ஸ்டேஹுயூட் (Buxtehude) நகரங்கள் வழியாக 100 கிலோ மீட்டர் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது இந்த ட்ரெயின்கள்.
அல்ஸ்டோம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹென்றி பாவ்பர்ட் லஃபார்ஜ் இது குறித்து பேசும் போது “உலகின் முதல் ஹைட்ரஜன் ட்ரெய்ன்களை அதிக அளவு தயாரிக்க உள்ளோம் என்றும், மிக விரையில் சோதனை ஓட்டங்கள் முடிக்கப்பட்ட ட்ரெயின்களில் மக்கள் பயணிக்கலாம்” என்றும் கூறியிருக்கிறார்.
2021ம் ஆண்டிற்குள் 14 புதிய ஹைட்ரஜன் ட்ரெய்ன்களை ஜெர்மனியில் இருக்கும் லோவர் சாக்ஸோனி மாநிலத்திற்கு தயாரித்து தருவதாக திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 2022ம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டில் ஹைட்ரஜன் ட்ரெய்ன்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
என்ன தொழில் நுட்பத்தில் இயங்குகிறது ஹைட்ரஜன் ட்ரெய்ன் ?
ஹைட்ரஜன் ட்ரெய்னகள் இரண்டிலும் ஃப்யூல் செல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்களால் இந்த செல்கள் இயங்கத் துவங்கி ட்ரெய்ன்களை இயக்குகின்றன. மீதமாகும் சக்தியை கிரகித்து சேமித்துக் கொள்வதற்காக இயன் - லித்தியம் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு டேங்க் ஹைட்ரஜன் வாயுவை நிரப்பிக் கொண்டு 1000 கிலோ மீட்டர் வரை இந்த ட்ரெய்ன்களை இயக்க இயலும்.
ஜெர்மனியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டினை தடுக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ட்ரெய்ன்கள் டீசல் ட்ரெய்ன்களுக்கும் மாற்றாக செயல்பட்டு காற்று மாசுபாட்டின் அளவை குறைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஆனால் டீசல் ட்ரெய்ன்களை விட ஹைட்ரஜன் ட்ரெய்ன்களின் விலை சற்றே கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி மற்றும் அல்லாமல் இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, மற்றும் கனடா நாடுகளிலும் ஹைட்ரஜன் ட்ரெய்ன்களை பயன்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.