ஒரு மாபெரும் குறுங்கோள் பூமியை நோக்கி வருகிறதா? அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

2008 GO20 குறுங்கோள் சமீபத்தில் ஜூன் 20, 2008 அன்று வருகை தந்தது. மேலும், இது ஜூலை 25, 2034 இல் மீண்டும் பறந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

giant asteroid headed towards Earth, asteroids, குறுங்கோள்கள், நாசா, பூமியை நோக்கி வருகிற குறுங்கோள், giant asteroid, 2008 GO20 asteroid, NEOs, NEAs, NASA

ஒரு பெரிய குறுங்கோள் ஜூலை 25ம் தேதி அதிகாலை 3 மணியளவில் நமது பூமி கிரகத்தைக் கடந்து பாதுகாப்பாக செல்லப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘2008 GO20’ என்று பெயரிடப்பட்ட, பூமிக்கு அருகிலுள்ள ஒரு குறுங்கோள் அதனுடைய நீளம் சுமார் 200 மீட்டர் அளவில் ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாக இருக்கக்கூடும்.

நாசா மதிப்பீடு படி, இது பூமியை வினாடிக்கு 8.2 கி.மீ வேகத்தில் கடந்து செல்லும். மேலும், நமது பூமி கிரகத்திலிருந்து 3 முதல் 4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது மடங்கு தூரத்தில் இருக்கிறது.

அடிக்கடி வருகிற குறுங்கோள்

2008 GO20-இன் சமீபத்திய வருகை ஜூன் 20, 2008ல் நடந்தது. மேலும், இது ஜூலை 25, 2034 இல் மீண்டும் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள் என்ன?

நாசா கருத்துப்படி, பூமிக்கு அருகே உள்ள பொருட்கள் குறுங்கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் ஆகும் அவை பூமிக்கு அருகே வரும். பெரும்பாலானவை பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் குறுங்கோள்கள்(NEO), அவை பூமிக்கு அருகில் உள்ள குறுங்கோள்கள் (NEA) என்று அழைக்கப்படுகின்றன. பூமிக்கு அருகில் உள்ள குறுங்கோள்கள் அவற்றின் தூரம் மற்றும் அச்சுகளைப் பொறுத்து அதிரா, ஏடன், அப்பல்லோ மற்றும் அமோர் என பிரிக்கப்படுகின்றன.

2008 GO20 பூமிக்கு அருகில் உள்ள பொருள் அப்பல்லோ NEO என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பல்லோக்கள் நமது பூமியின் அருகே ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது. மேலும், அவை பூமியின் சுற்றுப்பாதையை கடக்கும்போது அவை பூமி-குறுக்குவெட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை 1862 அப்பல்லோ குறுங்கோளுக்கு பிறகு பெயரிடப்பட்டுள்ளன.

2008 GO20 ஒரு அபாயகரமான குறுங்கோளா (PHA)?

0.05 வானியல் அலகுகளுக்குக் கீழே அல்லது 7.5 மில்லியன் கி.மீ தூரத்தில் பறக்கும் பூமிக்கு அருகிலுள்ள குறுங்கோள்கள் அபாயகரமான குறுங்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. 2008 GO20 குறுங்கோள் 0.02 வானியல் அலகு முதல் 0.03 வானியல் அலகு தொலைவில் பறக்கும் என்பதால், இது ஒரு அபாயகரமான குறுங்கோள் (PHA) ஆகும். ஒரு வானியல் அலகு என்பது சுமார் 150 மில்லியன் கி.மீ அல்லது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் ஆகும்.

இது ஒரு அரிய வானியல் நிகழ்வா?

இது ஒரு அரிய வானியல் நிகழ்வு இல்லை. இல்லை. நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள் ஆய்வுகளுக்கான மையத்தின் குறிப்பிட்டுள்ளபடி, ஜூலை 21ம் தேதி 6 பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் (6 NEO-க்கள்) 0.05 வானியல் அலகுக்கும் குறைவான தூரத்தில் பூமியைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 24ம் தேதி 2008 GO20இன் வருகைக்குப் பிறகு, 2021ல் 2020 BW12 மற்றும் 2019 YM6 என பெயரிடப்பட்ட NEO-க்கள் முறையே ஜூலை 26, ஜூலை 27 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் பூமிக்கு அருகில் பறந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Giant asteroid headed towards earth all you need to know

Next Story
ஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் கிடையாதாம்! ஆய்வாளரின் கணிப்புiOS 11
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com