ஸ்மார்ட்போனில் ஜிமெயில் பயன்படுத்துபவராக நீங்கள்? அப்போது இந்த ஆப்ஷன் உங்களுக்குத் தான். கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் செயலியில் சர்ச் (Search) ஆப்ஷனை மேம்படுத்த மெஷின் லேர்னிங் மாடல்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் இன்பாக்ஸ் தேடுதல்களை மேம்படுத்தலாம்.
போன் ஜிமெயில் ஆப்-ல் ஏதேனும் மெயில் தேடும் போது முடிவுகள் விரைவாக கிடைக்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மெஷின் லேர்னிங் மாடல்களைப் பயன்படுத்தி சிறந்த முடிவுகளைப் பெற முடியும். ஒரு பயனர் எதைத் தேடுகிறார் என்பதைப் பொறுத்து முடிவுகள் மிகவும் பொருத்தமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று கூகுள் கூறுகிறது.
கூகுள் கூற்றுப்படி. பயனர் ஜிமெயிலில் சர்ச் செய்யும் போது மெஷின் லேர்னிங் மாடல்கள் அந்த வார்த்தைகளைப் புரிந்து
அதற்கான முடிவுகளை கொடுக்கும். சரியான முடிவுகளைக் கொடுக்கும். அந்த முடிவுகள் தனிப் செக்ஷனில் முதலில் காண்பிக்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இது நீண்ட காலமாக பயனர்கள் பலரும் எதிர்பார்த்த அம்சம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் ஜிமெயில் சர்ச் பாக்ஸிற்கு செல்ல வேண்டும். அங்கு தேடுதல் குறிப்பு பதிவிட வேண்டும். அவ்வளவு தான் மெஷின் லேர்னிங் மாடல் பயன்படுத்தி ஜிமெயில் முடிவுகளை வழங்கும். இந்த அம்சம் நேற்று
(ஜூன் 2) முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“