கூகுளின் ஜிமெயிலில் இந்த சேவைகள் எல்லாம் இருக்கா? – நம்பவே முடியல

Gmail tips and tricks : நாம் ஜிமெயில் சேவையை பயன்படுத்துகிறோம், ஆனால் அதை முழுமையாக பயன்படுத்துகிறோமா என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

By: June 9, 2020, 1:07:24 PM

இணையதள சேவையில் கூகுள் நிறுவனம் முடிசூடா மன்னனாக விளங்குவதை யாராலும் மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. மாணவர்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் ஏதாவது ஒருவிசயத்தில் தகவல்களை தேட கூகுள் சேவையை பயன்படுத்தவே செய்வார்கள். அந்தளவிற்கு நீக்கமற எல்லா துறைகளிலும் தன் சேவையை, கூகுள் நிறுவனம் வியாபித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இமெயில் சேவையான ஜிமெயில் சேவையை சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். 2018ம் ஆண்டு நிலவரப்படி, 1.5 பில்லியன் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிமெயில் சேவை, தற்போதைய நிலையில், Google Docs, Drive உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.

நாம் ஜிமெயில் சேவையை பயன்படுத்துகிறோம், ஆனால் அதை முழுமையாக பயன்படுத்துகிறோமா என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.
இந்த கட்டுரையில் ஜிமெயில் டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் குறித்து காண்போம்.

 

ஜிமெயில் கணக்கை துவக்குவது எப்படி?

யாகூ உள்ளிட்ட இமெயில் சேவைகள் போரடித்து விட்டதா? இதோ ஜிமெயில் குடும்பத்திற்குள் நுழைய அருமையான சந்தர்ப்பம்
Gmail.com என்று டைப் செய்து திரையில் வரும் பக்கத்தில் Create account ஆப்சனை தேர்ந்தெடுத்து அதில் தனிநபர் பயன்பாடா அல்லது பிசினஸ் என்பதை தேர்ந்தெடுங்கள்.

பின் பெயர்., இமெயில் என்ன பெயரில் வேண்டும், பாஸ்வேர்டு உள்ளிட்டவைகளை பதிவிடவும்.
ஜிமெயில் வெரிகேசனிற்காக, பின் போன் நம்பர், மாற்று மெயில் ஐடி உள்ளிட்டவைகளை பதிவிடவும்.
மாற்று இமெயில் ஐடி மூலம் வெரிபிகேசன் நடைபெற்று, ஜிமெயில் அக்கவுண்ட் விபரங்கள், உங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் ஆக வந்து விடும்.
அவ்வளவுதான், சிம்பிள்

 

ஜிமெயில் அக்கவுண்டை டெலீட் செய்வது எப்படி?

தனிப்பட்ட காரணங்களுக்காக, ஜிமெயில் அக்கவுண்டை டெலீட் பண்ண விரும்புகிறீர்களா?
ஜிமெயில் அக்கவுண்டை திறக்கவும்
அதில் மை அக்கவுண்ட் பகுதியில், Data and personalization பிரிவில், டவுன்லோடு, டெலீட் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின் அதில், Delete a service or your account என்பதை சொடுக்கி, அக்கவுண்டை நிரந்தரமாக டெலீட் செய்துவிடலாம்.

 

டார்க் மோட் கொண்டுவருவது எப்படி?

இணையதளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் light mode வசதியையே விரும்புகிறார்கள். கண்கள் பாதிப்பு அடையாமல் இருக்கவும், லேப்டாப்களில் பேட்டரி திறன் விரைவில் தீராமல் இருப்பதற்காகவும், இமெயில் சேவையில் டார்க் மோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை, ஸ்மார்ட்போனில் ஜிமெயில் சேவையிலும் பயன்படுத்தலாம்

 

ஜிமெயில், Google Meet அழைப்புகளை எவ்வாறு மேற்கொள்வது?

ஜிமெயில் முகப்பு பக்கத்தில், Google Meet video call வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மீட்டிங் அழைப்பை ஸ்டார்ட் செய்த பிறகு யார் யாருடன் கலந்துரையாட விரும்புகிறீர்களோ அவர்களுக்கு அந்த பிரத்யேக குறியீட்டு எண்ணை அனுப்பி, அவர்களை இணைத்துக்கொண்டு அவர்களுடன் நாம் கலந்துரையாடலாம்.

 

மெயில்களை Schedule செய்வது எப்படி

குறிப்பிட்ட முக்கியமான மெயில்களை, இந்த நேரத்தில் தான் அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டுள்ளீர்களா?. அதற்கேற்ப, நாம் முன்கூட்டியே திட்டமிட்டு மெயில்களை Schedule செய்துகொள்ளலாம்.
வழக்கமாக மெயில் அனுப்புவதில் உள்ள நடைமுறைகளை பின்பற்றி இறுதியாக அனுப்பும் நேரத்தில், நாம் யாருக்கு, எந்த தேதியில், எந்த நேரத்தில் அனுப்ப வேண்டும் என்பதை நாம் Schedule செய்துகொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Gmail tips and tricks: How to turn on dark mode, schedule emails and more

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Gmail gmail tips and tricks how to create a gmail account how to delete a gmail account

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X