கூகுள் ஜிமெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் மீட் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. இதில் குறிப்பாக ஜிமெயில் அனைத்து பயனர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் செயலியில், பல ட்ரிக்கள் உள்ளன. அதனை கண்டறிந்துவிட்டால், செயலி பயன்பாடு மிகவும் எளிதாகிவிடும். அதன்படி, இங்கு ஜிமெயில் டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
Mute conversation
தேவையில்லாமல் உங்களுக்கு வரும் மெயில்களை மியூட் செய்திட முடியும். மெயிலை செலக்ட் செய்துவிட்டு, இன்பாக்ஸ் பாரில் உள்ள மூன்று டாட் மெனுவை கிளிக் செய்தால், மியூட் பட்டனை காண முடியும். அத்துடன், Mark as read, ‘Mark as important ‘ போன்ற ஆப்ஷன்களும் இடம்பெற்றிருக்கும்.
அதனையும் தேவையென்றால் தேர்வு செய்துக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி உங்களது இன்பாக்ஸில் சேரும் தேவையில்லாது மெசேஜ்களை கட்டுப்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“