தினமும் மெயிலை செக் செய்யும் நீங்கள்... இதை கவனித்தீர்களா?

புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ்

மெயிலில் சத்தம் இல்லாமல் ஒரு அப்டேட் நிகழ்ந்துள்ளது. அதாவது முக்கியமான மெயில்களுக்கு மட்டும் இனிமேல் குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும்.ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்பட்டுள்ளன.  .

அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது.ஜிமெயிலில் எப்போதுமே, ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யப்படும். அத்துடன், Confidential Mode ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.

இந்நிலையில் தான் தற்போது புதிய அப்டேட் இடம் பெற்றுள்ளது. உங்களில் மெயிலுக்கு முக்கியமான சில மின்னஞ்சல்கள் வந்தால் அவை ஒன்றுக்கு மட்டும் விரைவாக யூசர்களால் ரிப்பேளே செய்ய முடியும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) — டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close