Advertisment

வேண்டாத மெயில்களை மியூட் பண்ணுங்க… ஜிமெயில் யூசர்ஸ் தெரிய வேண்டிய 7 டிப்ஸ்!

ஜிமெயில் செயலியில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்களை இங்கே காணலாம்

author-image
WebDesk
New Update
வேண்டாத மெயில்களை மியூட் பண்ணுங்க… ஜிமெயில் யூசர்ஸ் தெரிய வேண்டிய 7 டிப்ஸ்!

ஜிமெயில் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் செயலியில், பல ட்ரிக்கள் உள்ளன. அதனை கண்டறிந்துவிட்டால், செயலி பயன்பாடு மிகவும் எளிதாகிவிடும். அதன்படி, இச்செய்தி தொகுப்பில் 7 ஜிமெயில் டிப்ஸ்களை காணலாம்.

Advertisment

Advanced Search

Gmail இன் அட்வான்ஸ்டு சேர்ச் ஆப்ஷன், சேர்ச் அளவை குறைத்து, எளிதாக ரிசல்ட் கிடைத்திட உதவிகிறது. உதாரணமாக, குறிப்பிட்ட நபரின் மெயிலை கண்டறிய, சேர்ச் பாக்ஸில் மெயிலை ஐடியை டைப் செய்து, மொத்த மெயிலில் உட்கார்ந்து தேடனும். ஆனால், அட்வான்ஸ்ட் சேர்ச் ஆப்ஷனில் சைஸ், தேதி, அட்டாச்மென்ட் இருக்கும் மெயில் ஆர் இல்லாத மெயில் என வகைப்படுத்தும் போது, எளியாக கண்டறியலாம்.

Undo send

ஜிமெயில் நீங்கள் அனுப்பிய மெயிலில் எதேனும் தவறு இருப்பதை கண்டறிந்தால், அதனை அனுப்பாமல் கேன்சல் செய்யும் வசதியாகும். மெயலில் Send பட்டன் கிளிக் செய்ததும், திரைக்கு கீழே Undo send பட்டன் தோன்றக்கூடும். குறிப்பு, அந்த பட்டன் திரையில் எவ்வளவு நேரம் இருக்கவேண்டும் என்பதை நீங்களே settingsஇல் தீர்மானித்துக்கொள்ளலாம். மெயில் அனுப்பியதும், ஏதெனும் தவறு என கண்டறிந்தால் உடனே Undo பட்டன் கிளிக் செய்யுங்கள். அந்த மெயில் ரிட்டன் ஆகிவிடும்.

Confidential mode

ஜிமெயில் Confidential mode என்பது, வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மெசேஜ் மறைவது போன்ற வசதியாகும். Send பட்டன் இருக்கும் இடத்தில், lock and clock பட்டனை காண முடியும். அந்த பட்டனில் மெயில் டெலிட் ஆக வேண்டிய நேரத்தை முடிவு செய்ய முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, மெயில் இன்பாக்ஸில் இருக்காது. அதில் அனுப்பிய கன்ட்ன்ட்களையும் செவ் செய்திட முடியாது.

Writing suggestions

ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் அல்லது ரைட்டிங் பரிந்துரை வசதி மூலம், விரைவாக டைப் செய்திட சில பொதுவான வாக்கிய பரிந்துரை திரையில் தோன்றும். Gmail Settingsஇல் Smart Compose ஆன் செய்துவிட்டால், டைப் செய்கையில் பரிந்துரைகளை காணலாம்.

உதாரணமாக, நீங்கள் I have attached என டைப் செய்தால், அதன் பிறகு நீங்கள் டைப் செய்யவுள்ள வார்த்தை கண்டறிந்து திரையில் காட்டும். அது சரியாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் Right arrow press செய்தால், அவை தானாகவே டைப் செய்த வார்த்தைக்கு அடுத்து வந்துவிடும். உங்களுக்கு நேரம் மீச்சமாகும்.

Mute conversation

தேவையில்லாமல் உங்களுக்கு வரும் மெயில்களை மியூட் செய்திட முடியும். மெயிலை சேலக்ட் செய்துவிட்டு, இன்பாக்ஸ் பாரில் உள்ள மூன்று டாட் மெனுவை கிளிக் செய்தால், மியூட் பட்டனை காண முடியும். அத்துடன், Mark as read, ‘Mark as important போன்ற ஆப்ஷன்களும் இடம்பெற்றிருக்கும். அதனையும் தேவையென்றால் தேர்வு செய்துக்கொள்ளலாம்.

Colour coded stars

ஜிமெயிலில் முக்கியமான மெயில்களை கண்டறிய ஸ்டார் ஆப்ஷன் பயன்படுத்துவது வழக்கம். தனிப்பட்ட மெயில், அலுவலக மெயில் என வகைப்படுத்திட வெவ்வேறு நிறங்களில் ஸ்டார் ஆப்ஷன் வைக்கும் வசதியும் உள்ளது. அலுவலக ரிதியான மெயில்களுக்கு ஒரு நிறத்திலும், தனிப்பட்ட மெயிலுக்கு மற்றொரு நிறத்தில், வெறு தளத்தில் இருந்து வரும் மெயிலுக்கு தனி நிறத்திலும் ஸ்டார் அம்சத்தை தேர்வு செய்யலாம். multiple coloured stars ஆப்ஷன் உபயோகிக்க, முதலில் gmail settings இல் star அம்சத்தில் drag the coloured stars லிஸ்ட்டில் ‘Not in use’ என இருப்பதை 'In use’ என மாற்ற வேண்டும்.

Change tab layout

ஜிமெயிலில் social and promotional ரீதியான மெயில்கள் தனி செக்ஷனில் இருக்கும். அவை personal and office மெயில்களுடன் இணைந்துவிடக்கூடாது என்பதற்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் விரும்பினால் டேப்களை மாற்றியமைக்கலாம். Gmail Settingsஇல் Inboxக்கு சென்று Categories-ஐ மாற்றிக்கொள்ளாம். எந்த டேப் ஜிமெயில் வந்ததும் தெரியவேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gmail
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment