ட்விட்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்ட்டை உடனடியாக மாற்றும்படி ட்விட்டர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக உள்ள ட்விட்டர் வலைப்பக்கம் தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்களில் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகின்றன.
ஒரு செய்தியை உலகமறிய செய்ய வேண்டும் என்றால், ட்விட்டரில் பதிவு செய்தால் அடுத்த 1 மணி நேரத்திற்குள் வைரலாகி விடும். சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுந்த சர்ச்சையினால், பலரும் ட்விட்டர் பக்கம் மீது தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ட்விட்டர் பாஸ்வேர்டு பின்னணியில் ப்ராசஸ் செய்யும் மாஸ்க்கிங் வசதியில் சிறு 'பக்' ஒன்று உருவாகியுள்ளது. இதை நாங்கள் சரி செய்துவிட்டோம். எனினும் யார் மூலம் தொழில்நுட்பத்தில் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, ட்விட்டரில் செலுத்திய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளும்படியும், அதே பாஸ்வேர்டை வேறு ஏதாவது இடத்தில் உபயோகித்திருந்தால் அதை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
,
ஆனால், அதே பதிவில் யூசர்கள் பலரும், ” எங்களுக்கே எங்களின் ட்விட்டர் பாஸ்வேர்ட் தெரியாது. நீங்களே அதையும் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்து வருகின்றன.