Advertisment

குட்பை, கோர்டானா: விண்டோஸில் இனி இந்த அம்சம் இல்லை; காரணம் என்ன?

Cortana: மைக்ரோசாப்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் சிஸ்டன் கோர்டானா இனி வரும் விண்டோஸ் அப்டேட்டில் பயன்படுத்தப்பட மாட்டது என நிறுவனம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
AI assistant Cortana

First launched in 2014, AI assistant Cortana is inspired by a character with the same name from Microsoft's Halo games. (Image: Microsoft)

மைக்ரோசாப்ட் பில்ட் வருடாந்திர மாநாட்டைத் தொடர்ந்து இந்தச் செய்தி வந்துள்ளது. இதற்கு பதிலாக நிறுவனம் கோபைலட் என்ற கருவியை அறிவித்துள்ளது. இந்த கோபைலட் டூல் கோர்டானாவுக்கு மாற்றாகவும் கோர்டானா செய்யும் அனைத்து செயலிகளையும் செட்டிங்ஸ் மாற்றுதல், உள்ளடக்கத்தைச் சுருக்குதல், கேள்விகளுக்குப் பதிலளிப்பது உள்ளிட்ட பலவற்றை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

2014-ல் Windows Phone 8.1 உடன் முதன்முதலில் கோர்டானா அறிமுகப்படுத்தப்பட்டது. AI தொழில்நுட்பத்துடன் Windows 10 மூலம் டெஸ்க்டாப்பில் தொடங்கப்பட்டது. விண்டோஸ் ஆபிஸ் முதல் அனைத்து செட்டிங்சிலும் பயன்படுத்தப்பட்டது.

நாளடைவில் கோர்டானா பயன்பாடு குறைந்தது. குறிப்பாக விண்டோஸ் 11 அப்டேட்டில் கோர்டானா டாஸ்க்பாரில் இருந்து வெளியேறியது. இதனால் பயன்பாடு வெகுவாக குறைந்தது. இருப்பினும் இது எப்போது நிறுத்தப்படும் என்ற தகவல் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Microsoft
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment