பிளாஸ்டிக் சிம் கார்டு-ஐ தூக்கி எறிங்க.. ஸ்மார்ட் உலகிற்கான ஸ்மார்ட் இ-சிம் வந்தாச்சு!

இ-சிம் (e-SIM) என்பது எதிர்கால சிம் கார்டு தொழில்நுட்பமாகும். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிம் கார்டுகளுக்கு மாற்றாக, சாதனங்களுக்குள் நிரந்தரமாக உள்பொதிக்கப்பட்ட (Embedded) சிப் வடிவில் இருக்கும்.

இ-சிம் (e-SIM) என்பது எதிர்கால சிம் கார்டு தொழில்நுட்பமாகும். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிம் கார்டுகளுக்கு மாற்றாக, சாதனங்களுக்குள் நிரந்தரமாக உள்பொதிக்கப்பட்ட (Embedded) சிப் வடிவில் இருக்கும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
e-SIM

பிளாஸ்டிக் சிம் கார்டு-ஐ தூக்கி எறிங்க... ஸ்மார்ட் உலகிற்கான ஸ்மார்ட் இ-சிம்!

இ-சிம் (e-SIM) என்பது சிம் கார்டுகளின் எதிர்காலம் என்றழைக்கப்படுகிறது. நாம் தற்போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிம் கார்டுகளுக்கு மாற்றாக, இது ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றில் உள்ளமைக்கப்பட்ட (Embedded) சிப் வடிவில் வருகிறது. இ-சிம்மில் 'e' என்பது 'Embedded' என்பதைக் குறிக்கிறது. அதாவது, உங்கள் போனுக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சிப்.

Advertisment

இ-சிம் எப்படி வேலை செய்கிறது?

பாரம்பரிய சிம் கார்டில் தொலைத்தொடர்பு வழங்குநரின் (Airtel, Jio, BSNL போன்ற) தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும். பிளாஸ்டிக் கார்டை உங்கள் போனின் ஸ்லாட்டில் செருகினால்தான் நெட்வொர்க் கிடைக்கும். ஆனால், இ-சிம்-மில் சிம் ஸ்லாட் தேவையே இல்லை. உங்க தொலை பேசி அல்லது ஸ்மார்ட்வாட்சில் உள்ளமைக்கப்பட்ட சிம் சிப்பிற்கு, நீங்கள் தேர்ந்தெடுத்த நெட்வொர்க் வழங்குநரின் தகவல்களை க்யூஆர் கோடு அல்லது மொபைல் ஆப் மூலம் டவுன்லோடு செய்ய முடியும். இது மென்பொருள் மூலம் செயல்படும் சிம் கார்டு.

முதலாவதாக, இது பல நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது. நீங்கள் ஒரே இ-சிம் சிப்பில் பல தொலைத்தொடர்பு வழங்குநர்களின் சுயவிவரங்களைச் சேமித்து வைக்கலாம். தேவையானபோது எளிதில் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம். இரண்டாவதாக, வெளிநாட்டுப் பயணத்தின்போது இது மிகவும் உதவியாக இருக்கும். பிளாஸ்டிக் சிம்மை மாற்ற வேண்டியதில்லை; வெளிநாட்டு நெட்வொர்க் பிளானை உங்கள் இ-சிம்-மிலேயே எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

சிறிய சாதனங்களுக்கு இ-சிம் வரப்பிரசாதம். ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற மிகச் சிறிய சாதனங்களில் சிம் ஸ்லாட்டிற்கு இடம் தேவையில்லை. இது சாதனங்களின் டிசைனை (Design) மேம்படுத்த உதவுகிறது. மேலும், சிம் ஸ்லாட் இல்லாததால், சாதனங்களில் நீர் புகுவதற்கான (Water Damage) வாய்ப்பு குறைகிறது, இதனால் போன்களின் ஆயுள் நீடிக்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இ-சிம் மிகவும் சிறந்தது. உங்க போன் திருடுபோகும் பட்சத்தில், பிளாஸ்டிக் சிம்மைபோல இதை எளிதில் அகற்றவோ அல்லது மாற்றவோ முடியாது. இது சாதனத்தின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. மேலும், சிம்மைப் போலவே, இ-சிம் உங்களுக்கு ஃபோன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ், டேட்டா சேவைகளைத் தடையின்றி வழங்குகிறது.

Advertisment
Advertisements

இ-சிம்-ஐ பயன்படுத்துவது எப்படி?

முதலில், உங்க மொபைல் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் இ-சிம் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்து, உங்க தற்போதைய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் (ஜியோ, ஏர்டெல்) இ-சிம் சேவை வழங்குகிறார்களா என்று சரிபார்க்கவும். நெட்வொர்க் வழங்குநரிடம் இ-சிம் சேவைக்கான கோரிக்கையை வைக்கவும். பெரும்பாலான நிறுவனங்கள் இதனை ஆன்லைன் அல்லது ஆப் மூலமாகச் செய்ய அனுமதிக்கின்றன. கோரிக்கை வைக்கப்பட்ட பிறகு, உங்கள் இ-மெயில் முகவரிக்கு க்யூ ஆர் கோடு அனுப்பப்படும். உங்க போனின் செட்டிங்ஸில் (Settings) உள்ள 'மொபைல் நெட்வொர்க்' 'சிம் மேனேஜர்' பகுதிக்குச் சென்று, அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால், உங்கள் இ-சிம் தானாகவே செயல்படத் தொடங்கும். இ-சிம் தொழில்நுட்பம் படிப்படியாக உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. எதிர்காலத்தில் பெரும்பாலான சாதனங்களில் இ-சிம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: