கூகுள் மிகப்பெரிய search engine தளமாகும். உலகம் முழுவதும் பல்வேறு பயனர்களால் அன்றாடம் பயன்படுத்தப்படும் தளமாக உள்ளது. இந்நிலையில் பயனர்களின் வசதிக்காக கிராமர் செக் என்ற புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ மூலம் செயல்படும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் ஏதாவது இலக்கணப் பிழையுடன் எழுதப்பட்டால் இதன் மூலம் சரி செய்யப்படும். அந்த வாக்கியத்தை எப்படி எழுத வேண்டும் என்பதையும் இந்த அம்சம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் டாக்ஸ் மற்றும் ஜிமெயில் ஏற்கனவே இந்த அம்சம் இருந்தாலும், கூகுள் search engine-ல் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
ஏ.ஐ மூலம் செயல்படும் கிராமர் செக் பயன்படுத்துவது எப்படி?
முதலில் கூகுள் சென்று search bar-ல் நீங்கள் தேட வேண்டியவற்றை டைப் செய்து கடைசியில் “grammar check” or “check grammar” என்பதை டைப் செய்யுங்கள். இப்போது நீங்கள் டைப் செய்தவற்றில் உள்ள கிராமர் பிழைகளை இது சுட்டிக்காட்டும்.
இப்போது கிராமர் செக் பிழைகளை அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டும். எல்லாம் சரியாக இருந்தால், உங்களுக்குத் தெரிவிக்க பச்சை நிறச் சரிபார்ப்புக் குறியை இது காண்பிக்கும். இப்போது இந்த வாக்கியத்தை பயன்படுத்தி தேட mouse பயன்படுத்தி அந்த வார்த்தைகளை காப்பி செய்து பின்னர் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“