குளோபல் Accessibility தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது தயாரிப்புகளில் லுக் அவுட், மேப்ஸ் வசதிகளில் புதிய accessibility வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் லுக்அவுட் ஆப்ஸில் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு உதவ தங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற உதவுகிறது. லுக்அவுட் ஆப்ஸில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதியில் அருகில் உள்ள பொருட்கள் பாத்ரூம், இருக்கைகள் மற்றும் பிற பொருட்களை தேட அனுமதிக்கும். அதோடு, லுக்அவுட் அந்த பொருட்கள் உள்ள இடம், அதற்கான தூரத்தையும் இந்த வசதியில் கண்டறிய முடியும்.
அதே போல் கூகுள் மேப்ஸ் ஆப்பிலும், புதிய accessibility features கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் disabilities உள்ளவர்கள் பொது வெளியில் நடைபயிற்சி செய்தற்கான விரிவான வழிமுறைகள் மற்றும் ஸ்கிரீன் ரீடர் அம்சங்களை வழங்குகிறது. லென்ஸ் அம்சம் இப்போது உங்களைச் சுற்றியுள்ள இடங்களின் பெயர்கள் மற்றும் வகைகளை announce செய்யும் திறனைப் பெறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/google-adds-new-accessibility-features-to-lookout-maps-android-9332797/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“