Smartphones getting Google android 10 android q updates ஆண்ட்ராய்ட் க்யூ தான் ஆண்ட்ராய்ட் 10 என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தெந்த போன்களுக்கு இந்த அப்டேட்கள் வரப்போகின்றது என்ற உங்களின் கேள்விகளுக்கு பதில்கள் இங்கே...
Google android 10 android q updates : அப்டேட்டினை பெறும் கூகுள் பிக்சல் போன்கள்
கூகுளின் பிக்சல் போன்கள் தான் முதலாவதாக அப்டேட்டை பெறும் போன்கள் ஆகும். ஆண்ட்ராய்ட் 10 வெளியான உடனே கூகுள் பிக்சல் 3, கூகுள் பிக்சல் 3XL, கூகுள் பிக்சல் 2, கூகுள் பிக்சல் 2 XL, கூகுள் பிக்சல், பிக்சல் XL மற்றும் பிக்சல் 3A, பிக்சல் 3A XL போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டினை பெறும். அக்டோபர் மாதம் வெளியாகும் கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் போதே ஆண்ட்ராய்ட் 10 இயங்கு தளத்தில் தான் இயங்கும்.
HMD Global’s Nokia phones
நோக்கியாவில் புதிய அப்டேட்டை பெறும் போன்கள் குறித்த ட்வீட் ஒன்றை அந்நிறுவனத்தின் சீஃப் ப்ரோடக்ட் ஆஃபிசர் ஜூஹோ சர்விகாஸ் வெளியிட்டார். அதில் ஆண்ட்ராய்ட் 9 ப்யூர்வியூ, நோக்கியா 8.1, நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டினை இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 7 ப்ளஸ், நோக்கியா 6.1 ப்ளஸ், நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டில் இந்த அப்டேட்டினை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : WhatsApp Fingerprint authentication : ஆண்ட்ராய்ட் வாட்ஸ்ஆப்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
OnePlus 7 Pro, OnePlus 7, OnePlus 6, OnePlus 6T and Android 10
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 6 மற்றும் 6டி ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டினை முதலில் பெறும். முதலில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ மற்றும் 7 போன்களில் இந்த அப்டேட்டினை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். பின்பு தான் 6 மற்றும் 6டிக்கு இந்த அப்டேட்கள் கிடைக்கும்.
ஆசூஸ் ஜென்போனின் 5Z இந்த அப்டேட்டினை பெறுகிறது.
சியோமி ஸ்மார்ட்போன்கள்
சியோமியின் Mi A3 ஸ்மார்ட்போன் இந்த அப்டேட்டினை பெறும். ஆண்ட்ராய்ட் க்யூ பீட்டா டெஸ்டிங் ப்ரோகிராமில் இயங்கிக் கொண்டிருக்கும் Mi 9, Mi MIX 3 ஸ்மார்ட்போனக்ள் இந்த அப்டேட்டினை பெறும்.
விவோ
Vivo X27, Vivo NEX S மற்றும் Vivo NEX A ஆண்ட்ராய்ட் க்யூ பீட்டா டெஸ்டிங் ப்ரோகிராமில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் புதிய அப்டேட்டினை பெறும். இவை மட்டுமல்லமால் ஓப்போ, ரியல்மீ, எல்.ஜீ,, சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களின் லேட்டஸ்ட் மாடல்கள் இந்த அப்டேட்டினை பெறுகின்றது.