/tamil-ie/media/media_files/uploads/2019/08/Android.jpg)
Google android 10 android q updates
Google Android 10 Updates: Redmi K20 Pro, OnePlus 7, 7 Pro get Android 10 betas : கூகுள் நிறுவனத்தின் இயங்கு தளமான ஆண்ட்ராய்டின் புதிய அப்டேட்டான ஆண்ட்ராய்ட் க்யூ (அதிகாரப்பூர்வமான ஆண்ட்ராய்ட் 10) தற்போது லைவில் வர துவங்கியுள்ளது. இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த இந்த இயங்குதளத்தினை தற்போது எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Google Android 10 Updates: Redmi K20 Pro, OnePlus ரெட்மி கே 20 (Redmi K20 Pro)
இந்தியா மற்றும் சீனாவில் இயங்கி வரும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்கள் இந்த இயங்கு தளத்தின் பீட்டா வெரெஷனை பெறுகிறது. சியோமியின் அதிகாரப்பூர்வ அனுமதியை பெற்ற பின்பே இதனை டவுன்லோடு செய்ய இயலும். இது பப்ளிக் பீட்டா வெர்ஷன் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 7 ப்ரோ
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் இந்த இரண்டு போன்கள் தற்போது ஆண்ட்ராய்ட் 10 அப்டேட்களை பெறுகிறது. இதுவும் பீட்டா வெர்ஷன் தான். ஆனால் இதற்கு அனுமதி ஏதும் தேவையில்லை. இந்த ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் பப்ளிக் ஆண்ட்ராய்ட் 10 பீட்டா வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளலாம்.
சாம்சங் ஸ்மார்ட்போன்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களான எஸ் 10, நோட் 10 சீரியஸில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்களை பெறுகிறது.
மேலும் படிக்க : புகைப்படக் கலைஞர்களை மகிழ வைக்கும் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.